ச.தொ.ச
நிறுவனத்தை மூடி இலாபம் பெற சிலர் முயற்சி
மோசடிகளை
தடுக்க நடவடிக்கை
அமைச்சர்
ரிசாத் பதியுதீன் தெரிவிப்பு
மோசடி காரணமாக ச.தொ.ச ஊழியர்கள் லொறி உரிமையாளர்களாக
மாறியுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் ரிசாத் பதியுதீன்
தெரிவித்தார். இந்த மோசடிகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர்
குறிப்பிட்டார்.
தயாசிறி ஜயசேகர எம்.பி எழுப்பிய கேள்விக்குப்
பதிலளிக்கையிலே அமைச்சர் இதனை தெரிவித்தார். ஹேசா விதாரண எம்.பி வாய்மூல விடைக்காக
எழுப்பியிருந்த கேள்விக்கு பிரதி அமைச்சர் புத்திக பத்திரண பதிலளித்தார். இதன்
போது குருநாகல் ச.தொ.ச களஞ்சியம் தொடர்பாக தயாசிறி ஜயசேகர எம்.பி இடையீட்டு
கேள்வி ஒன்றை எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது,
ச.தொ.ச நிறுவனத்தை மூடி இலாபம் பெற சிலர் முயல்கிறார்கள்.ச.தொ.ச
நிறுவனத்தின் களஞ்சியம் மற்றும் போக்குவரத்து பிரிவுகளில் தான் மோசடி
நடைபெறுகிறது. ச.தொ.ச ஊழியர்கள் லொறி உரிமையாளர்களாக மாறியுள்ளனர். லொறிச்
சாரதிகளை கண்காணிக்கும் வழிமுறை எதுவும் பின்பற்றப்படவில்லை. ச.தொ.ச நிறுவனத்தை
சரியான பாதையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தனியார்துறைக்கு போட்டியாக ச.தொ.ச செயற்பட்டுவருகிறது.
கே.பி.எம்.ஜி நிறுவனத்தினூடாக ஒரு வருட காலமாக ஆய்வு செய்து 3 வருட திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதனை
செயற்படுத்தி வருகிறோம். தவறுகள் இருக்கும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றை
திருத்தி வருகிறோம். ச.தொ.சவிற்கு விண்ணப்பம் கோரி தகுதியான அதிகாரிகளையும்
நியமித்துள்ளோம். நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இலாபத்தில் இயங்கும் வகையில்
மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment