முஸ்லிம் பெண்களின் கல்வி உயர்ச்சிக்கு
கரிசனையுடன் உழைத்த பெருமகன்
மர்ஹும் எம்.ஸி.ஏ. ஹமீத் அவர்கள்
எம்.ஸி.ஏ. ஹமீத் அவர்கள்
நற்பண்புகளையுடையவர், மக்களுடன் அமைதியாகப்
பேசி அன்பாகப்
பழக்ககூடியவர். அவரிடம் ஒப்படைக்கப்பட்ட வேலைகளைக் கடமையுணர்வுடன்
மிகச் சிறப்பாக
செய்து முடிக்கக்
கூடிய ஆற்றல்
படைத்தவர்.
இவர்
சாய்ந்தமருது அல் – ஜலால் வித்தியாலயம், சாய்ந்தமருது
மல்ஹறுஸ் ஸம்ஸ்
வித்தியாலயம் ஆகியவற்றில் அதிபராகச்செயல்பட்டு
இப்பிரதேசத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு அரும்பணியாற்றியவர்.
கல்முனைப்
பிரதேசத்தில் பெண்கள் உயர்கல்வி பெறுவதற்கு என
கல்முனை மஹ்மூத்
மகளிர் கல்லூரி
அமைக்கப்பட்டு அக்கல்லூரியின் ஸ்தாபக அதிபராக 1971. 01. 05 ல் நியமிக்கப்பட்டார். சீறப்பன
முறையில் சேவையாற்றிய
இவர் தொடர்ச்சியாக
13 வருட சேவையின்
பின் 1984.02.20 ஆம் திகதி சேவையிலிருந்து ஓய்வு
பெற்றார்.
சாய்ந்தமருது
பெரிய பள்ளிவாசல்
நம்பிக்கையாளர் சபைத் தலைவராகவும் பொருளாளராகவும் இருந்து
சிறப்பாக சேவையாற்றியவர்.
இவர்,
சாய்ந்தமருது கிராம முன்னேற்றச் சங்கம், சமாதான
சபை,சன
சமூக நிலையம்,
இலங்கை இஸ்லாமிய
ஆசிரியர் சங்கம்
மற்றும் விவசாயக்
குழுக்கள் போன்ற
அமைப்புக்களில்தலைவராகவும் கல்முனை பிரதேச
சிவில் பாதுகாப்பு
பிரிவின் உப
தலைவராகவும் பதவிகள் வகித்து சிறப்பாகச் சேவையாற்றியவர்.
எம்.ஸி.ஏ. ஹமீத் அவர்கள்
கல்வி,சமூக,
சமய கலாசார
சேவைகளில் ஈடுபட்டு
அரும்பணியாற்றியமையைக் கருத்தில் கொண்டு
சர்வோதய தலைவர்
ஏ.ரி
ஆரியரத்ன அவர்களின்
தலைமையில் கல்முனை
பாத்திமாக் கல்லூரியில் இடம்பெற்ற வைபவத்தில் கெளரவிக்கப்பட்டு
பாராட்டப்பட்டார்.
அன்னாரது
குற்றம் குறைகளைப்
பொறுத்து அன்னாரின்
ஆத்மாவுக்கு சாந்தி அளித்தருள் புரிவாயாக...ஆமீன்
ஏ.எல்.ஜுனைதீன்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.