பிரதி அமைச்சராக புத்திக பத்திரண பதவிப் பிரமாணம்


மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன, கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவும் இந்த நிகழ்வில் பங்குபற்றினார்.
புத்திக பத்திரண, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top