கல்முனை மாநகர சபையா?
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையா?
யார் பொறுப்பு???


சாய்ந்தமருது வைத்தியசாலை பின்புறமாக அமைந்துள்ள வீதியில் ஒரு வீட்டிற்கு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் குடிநீர் இணைப்பை வழங்குவதற்காக சேதமாக்கப்பட்ட வீதி இதுவரை சீர்செய்யப்படாமல் காணப்படுகின்றது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன் இந்த வீதி தோண்டப்பட்டதை நான் நேரடியாக கண்டிருந்தேன். பொதுவாக, நீரிணைப்பை பெறும் நோக்கில் வீதி சேதமாக்கப்படுவதற்காக குறித்த உள்ளூராட்சி நிறுவனம் ஒரு கட்டணத்தை அறவிடுகின்றது. அந்த வகையில் இந்த வீதி சேதமாக்கலுக்கான கட்டணத்தை வீட்டு உரிமையாளர் கல்முனை_மாநகர_சபைக்குச் செலுத்தியிருப்பார்.
இங்கு குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய விடயம் அறவிடப்படும் கட்டணம் சேதமாக்கப்பட்ட வீதியை புனரமைப்புச் செய்வதற்கா அல்லது வேறு ஏற்பாடுகளின் நிமிர்த்தம் அறவிடப்படுகின்றதா என்பதை அறிய வேண்டியுள்ளது.
மேற்படி கட்டணம், சேதமாக்கப்பட்ட வீதியை சீர்செய்வதற்காகவே அறவிடப்படுமானால் இந்த வீதியை கல்முனை மாநகர சபை திருத்தியமைக்க வேண்டும் அல்லது இந்த வீதியை செப்பனிடும் பொறுப்பு யாருடையது என்பது தொடர்பாக வீட்டு உரிமையாளர்களுக்கு தெளிவுபடுத்தப்படல் வேண்டும்.
தோண்டப்பட்ட வீதி முழுமையாக செப்பனிடப்படாது மண், கொங்றீட் உடைவுகளுடன் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதை படத்தில் காணலாம்.
எம்..சர்ஜூன்
சாய்ந்தமருது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top