பிள்ளையானுக்கு ஆதரவாக அவர்மீதான
பயங்கரவாதத தடைச்சட்டத்தை நீக்குமாறுகோரி
அடையாள உண்ணாவிரதம்
பிள்ளையான்
எனப்படும் சிவநேசத்துரை
சந்திரகாந்தன் மீதான பயங்கரவாதத தடைச்சட்டத்தை நீக்குமாறுகோரி உண்ணாவிரத
போராட்டமொன்று முன்னேடுக்கப்பட்டுள்ளது.
கடந்த
மூன்று வருடங்களாக
சிறைவாசம் அனுபவித்துவரும்
கிழக்கு மாகாண
முன்னாள் முதலமைச்சரும்
தமிழ் மக்கள்
விடுதலைப் புலிகள்
கட்சியின் தலைவருமான
பிள்ளையானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், உள்ளூராட்சி
சபை உறுப்பினர்களின்
ஒன்றியம் உண்ணாவிரதத்தை
ஆரம்பித்துள்ளனர்.
இன்று
(25) காலை மட்டக்களப்பு
மகாத்மா காந்தி,
பூங்காவில் மட்டக்களப்பு மக்கள் விடுதலைப் புலிகள்
கட்சியின் செயலாளர்
பி. பிரசாந்தனின்
தலைமையில் இவ்வுண்ணாவிரதம்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மாநகர
சபை, பிரதேச
சபை உறுப்பினர்கள்
இந்த உண்ணாவிரதத்தில்
கலந்து கொண்டிருந்தனர்.
கடந்த
2005 ஆம் ஆண்டு
டிசம்பர் 25 ஆம் திகதி, மட்டக்களப்பு புனித
மரியாள் தேவாலயத்தில்
நத்தார் ஆராதனையில்
ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
ஜோசப் பரராஜசிங்கத்தின்
படுகொலை தொடர்பாக
பிள்ளையான் கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.