உண்மைகளைக் கண்டறிந்துவிட்டு உரை நிகழ்த்தியிருந்தால்
சிறப்பாக இருந்திருக்கும்
அமைச்சர் விஜேதாஸவுக்கு இஸ்மாயில் எம்.பி. பதில்
தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பாலியல் இலஞசம்
பெற்றதாக அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ
குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்த உண்மை நிலையை அறிந்து அல்லது குற்றம்
நிருபிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் இதுகுறித்து பேசியிருப்பாரானால் சிறப்பாக
இருந்திருக்கும். அமைச்சரின் பேச்சினால் பல்கலைக்கழகத்திலுள்ள மாணவிகள் பல்வேறு
மன உளச்சளுக்கு உள்ளாகியிருக்கின்றனர். என நாடாளுமன்ற
உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் சபையில் தனது கன்னியுரையில் தெரிவித்தார்.
தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்றுக்கொண்ட கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பொதுக் கணக்குகள்
குழுவின் அறிக்கைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே
அவர் இவ்வ்றூ தெரிவித்தார்.
தொடர்ந்து உரைநிகழ்த்திய நாடாளுமன்ற உறுப்பினர்
கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் மேலும் தெரிவித்ததாவது,
அரசாங்கத்தினால்
உபவேந்தர் ஒருவருக்கு
வழங்கப்பட்ட சலுகைகளே எனக்கும் வழங்கப்பட்டது. இதில்
ஊழல் செய்வதற்கு
எதுவுமில்லை, எதையும் ஆராய்ந்து பேசுவதே அமைச்சருக்கு
சிறப்பானது.
நான்
சத்தியப் பிரமாணம்
செய்தபோது என்மீது
பல்கலைக்கழகத்தில் நான் உபவேந்தராக
இருக்கின்றபோது எனது வீட்டுக்கு நீர்க்கட்டணமும், மின்சாரக் கட்டணமும் செலுத்தப்பட்டதாக இங்கு உரையாற்றிய உயர் கல்வி
அமைச்சர் விஜயதாச
ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார்.
ஒரு
உபவேந்தர் என்பவர்
அவருக்குப் பல்வேறுபட்ட சலுகைகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருக்கின்றது.
அது சட்டரீதியாக
வழங்கப்பட்ட ஒன்று. அது மாத்திரமல்லாமல் பல்கலைக்கழகத்தின்
மூதவையினூடாக அது வழங்கப்பட்டிருக்கின்றது.
ஆகவே அந்த
அனுமதியோடு பல்கலைக்கழகத்திலிருக்கின்ற எல்லா
மட்டத்தினரின் அனுமதியோடுதான் எனக்கு அந்த சலுகைகள்
வழங்கப்பட்டது. அதற்கான ஆவணங்கள் என்னிடம் இருக்கின்றது.
தேவை ஏற்படின்
கௌரவ சபாநாயகர்
அவர்களுக்கு சமர்ப்பிக்கவும் நான் தயாராக இருக்கிறேன்.
அதுமாத்திரமல்லாமல்
நான் கடமைபுரிந்த
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில்; பாலியல்
இலஞ்சம் பெறுவதாக
குறிப்பிட்டிருந்தார்கள். ஒரு பல்கலைக்கழகம்
என்பது ஒரு
நாட்டின் சொத்து.
கல்வியின் முதுசமாக
பார்க்கப்படுகின்றது. அங்கிருக்கின்ற பெண்கள்,
ஆண்கள் இன்று
பல்வேறுபட்ட மன உளைச்சலுக்கு உட்பட்டிருக்கின்றார்கள். எதுவாக இருந்தாலும்
அது உண்மையிலேயே
நிரூபிக்கப்பட்ட பின்பு இவ்வாறான சபையில் பேச
வேண்டும்;.
இந்த
நாட்டைப் பொறுத்தவரையில்
1960களில் ஆசியாவின்
அதி உச்ச
இடத்திலிருந்த ஒரு நாடாக இலங்கையைப் பார்த்தார்கள்.
ஆனால் இன்று
இந்த நாடு
பொருளாதார ரீதியாகவும்
அதேபோன்று இனங்களுக்கிடையேயுள்ள
இன விரிசல்களின்
காரணமாகவும் இந்த நாட்டின் அபிவிருத்தி கேள்விக்குறியாக
இருந்து கொண்டிருக்கின்றது.
அவ்வாறான ஒரு
காலகட்டத்தில் எங்களுக்குள் இருக்கின்ற வேற்றுமைகளை நாங்கள்
களைந்து இந்த
நாட்டின் வளர்ச்சிக்காக
வேண்டியும் இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக
வேண்டியும் பல்வேறுபட்ட முன்னெடுப்புக்களை
செய்ய வேண்டிய
ஒரு சூழ்நிலையில்
வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
ஆகவே
இந்த நாட்டை
நாங்கள் பொருளாதார
ரீதியாக பலம்மிக்க
ஒரு நாடாகவும்
அதேபோன்று இந்த
நாட்டிலிருக்கின்ற ஏனைய பிரச்சினைகளுக்கு
சரியான முடிவுகளைக்கட்டி
இந்த நாட்டில்
வாழுகின்ற நாம்
அனைவரும் ஒரு
தாய் மக்கள்
போல் வாழ
வேண்டும்.
மேலும்,
என்னுடைய அரசியல்
பிரவேசத்தினூடாக தேசியபட்டியலினூடாக இன்று இந்தப் பாராளுமன்றக்
கதிரையை அலங்கரிப்பதற்காக
வேண்டி என்னுடைய
கட்சியின் தலைவர்
கௌரவ றிஷாட்
பதியுதீன் அவர்களின்
பணிப்புரைக்கமையவும் அதேபோன்று ஐக்கிய
தேசியக் கட்சியின்
தலைவரும் கௌரவ
பிரதம மந்திரியுமான
ரணில் விக்;ரமசிங்ஹ அவர்களின்
சிபாரிசின் பேரிலும் இந்த பாராளுமன்ற அங்கத்துவத்தை
தந்தமைக்காக அவர்கள் இருவருக்கும் நன்றியைத் தெரிவித்து
அதேபோல் எனக்கு
வாக்களித்த அம்பாறை மாவட்ட மக்களுக்கும் எனது
நன்றியைத் தெரிவித்துக்
கொள்கிறேன் இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment