புனித ஹஜ் சட்டத்தை தயாரிக்க
அரசாங்கம் நடவடிக்கை


புனித ஹஜ் யாத்திரை மற்றும் அது தொடர்பிலான பணிகளை ஒழுங்குபடுத்துவதற்காக ஹஜ் சட்டத்தை தயாரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மகாநாடு இன்று காலை அரச தகவல் திணைக்கள கட்டிடத்தில் நடைபெற்ற போது காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அமைச்சரவை துணைப் பேச்சாளருமான அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனை தெரிவித்தார்.
இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் , புனித ஹஜ் யாத்திரையில் ஈடுபடுவதற்காக வருடத்தில் 7,000 இற்கும் 10,000 இற்கும் இடைப்பட்ட பக்தர்கள் முஸ்லிம் மத மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கின்றனர். இருப்பினும் ஹஜ் யாத்திரைக்காக இலங்கைக்கு வருடாந்தம் 2,200 இற்றும் 3400 இற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலானவர்களுக்கே அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கிறது. இதனால் யாத்திரியர்கள் மற்றும் சுற்றுலாவில் ஈடுபடுவோடுரை தெரிவு செய்வது மிகவும் சிரமமாக அமைந்துள்ளது என்று குறிபிட்டார்.
இதனால் ஹஜ் யாத்திரை மற்றும் அது தொடர்பிலான பணிகளை ஒழுங்குபடுத்துவதற்காக ஹஜ் சட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்று ஆலோனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டமூலத்தை தயாரிப்புக்கான ஆலோசனை வழங்குவதற்காக தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சர் எம்.எச்..ஹலீம் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்றும் கூறினார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top