வியாழன் பிறை தென்பட்டாலும் வெள்ளி பெருநாள் இல்லையா?
“வெள்ளிக்கிழமைதான் பிறைக்குழு கூடும்;”
கொழும்பு பெரிய பள்ளிவாசலின் இந்த முடிவு ஏன்?
நாட்டில் எங்காவது, பிறை கண்டதாக இரண்டு பேர் சாட்சி சொல்வார்களானால், எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பெருநாளை கொண்டாடலாம் என, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் றிஸ்வி முப்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொள்ளுப்பிடியில் இடம்பெற்ற ஜும்ஆ பிரசங்கத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் றிஸ்வி முப்தி இதுகுறித்து மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையில் கடந்த மே மாதம் 18ஆம் திகதி புனித நோன்பு ஆரம்பமானது. இதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை பெருநாள் எடுக்க வேண்டி வந்தால், பிடித்த நோன்புகள் 28 ஆகவே அமையும்.
நோன்பு 28 உடன் நிறைவடைந்தால் ஒரு நோன்பை கழாச் செய்ய வேண்டும் என்பது சன்மார்க்கச் சட்டமாகும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்
வியாழன் பிறை
தென்பட்டாலும் வெள்ளி பெருநாள் இல்லை; என்ற
நிலைப்பாட்டில் “வெள்ளிக்கிழமைதான் பிறைக்குழு
கூடும்;” என்ற
தீர்மானம் ஜம்மிய்யத்துல்
உலமாவுடன் இணைந்து
எடுக்கப்பட்டதாக கொழும்புப் பெரிய பள்ளிவாசலினால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பிறைகண்டால்
பெருநாளாகும். பெருநாள் தினத்தில் நோன்பு வைப்பது
ஹறாமாகும். இந்நிலையில் இந்த முடிவு ஏன்?
அவ்வாறாயின் மார்க்கச்சட்டம் தெரியாமலா உலமா சபைத்தலைவர்
ஏற்கனவே அந்த
அறிவிப்பைச் செய்தார்? அல்லது அவர் ஏற்கனவே
செய்த அறிவுப்பு
சரியென்றால் இப்பொழுது இந்த பிழையான தீர்மானத்திற்கு
உலமாசபை இணங்கியதேன்?
0 comments:
Post a Comment