மலேசிய முன்னாள் பிரதமர் வீட்டிலிருந்து
பறிமுதல் செய்யப்பட்ட
பொருட்களின் மதிப்பு 22.5 கோடி டாலர்
மலேசிய
முன்னாள் பிரதமர்
நஜீப் ரசாக்
வீட்டில் இருந்து
பறிமுதல் செய்யப்பட்ட
பொருட்களின் மொத்த மதிப்பு 22.5 கோடி டாலர்
என பொலிஸார்
இன்று வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவித்துள்ளனர்
பணமோசடி
வழக்கில், மலேசியாவின்
முன்னாள் பிரதமர்
நஜீப் ரசாக்கின்
வீடு மற்றும்
அலுவலகம் என
6 இடங்களில் காவல்துறையினர் கடந்த மாதம் சோதனை
நடத்தினர்.
சோதனையின்
போது சுமார்
284 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த மாடர்ன் கைப்பைகளை பொலிஸார்
பறிமுதல் செய்தனர்.
அந்த பைகள்
பலவற்றில் நகைகளும்,
பல லட்சம்
மதிப்பிலான பணமும் வைக்கப்பட்டிருந்தது
கண்டறியப்பட்டது. கைப்பற்றபட்ட
பணம், நகைகளின்
மதிப்பை தற்போது
வெளியிட முடியாது
எனவும், மீதமுள்ள
பைகளையும் சோதனை
செய்து அவற்றின்
மதிப்பையும் கண்டறிய வேண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த
ஒரு மாதமாக
கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பை 150 பொலிஸார் கணக்கீட்டு
வந்த நிலையில்,
அதன் மொத்த
மதிப்பை பொலிஸார்
வெளியிட்டனர். நஜீப் ரசாக்கிடமிருந்து 22.5 கோடி டாலர் (இலங்கைமதிப்பின் படி 3600 கோடி ரூபாய்) மதிப்பிலான பொருட்கள்
பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக
பொலிஸார்ர் அறிவித்துள்ளனர்.
அவற்றில் 12 ஆயிரம் நகைகள், 567 ஆடம்பர
கைப்பைகள், 234 சன்கிளாசஸ் மற்றும் 423 விலையுயர்ந்த கைக்கடிகாரம்
போன்றவை அடங்கும்.
இது
மலேசிய வரலாற்றில்
இதுவரை கிடைக்காத
மிகப்பெரிய புதையலாக கருதப்படுகிறது. இவ்விகாரத்தில் முன்னாள்
பிரதமர் நஜீப்
மற்றும் அவரது
மனைவியிடம் விசாரணை நடத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நஜீப்
ரசாக் நிறுவிய
மலேசியா வளர்ச்சி
நிறுவனம் மூலம்
பல கோடி
டாலர்கள் பண
மோசடியில் நஜீப்
ஈடுபட்டதாக பல்வேறு நாடுகளில் விசாரணை நடைபெற்று
வருகிறது. தற்போது
நஜீப் ரசாக்கும்
அவரது மனைவியும்
நாட்டை விட்டு
வெளியேற தடை
விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment