மாகாணசபைத் தேர்தல் – இழுபறியால்
முடிவின்றி முடிந்தது கட்சித் தலைவர்கள் கூட்டம்
நாடாளுமன்றக்
கட்சித் தலைவர்களின்
நேற்றைய கூட்டம்,
மாகாண சபைத்
தேர்தல் தொடர்பான
எந்த முடிவும்
எடுக்காமல் முடிவுக்கு வந்தது.
நேற்று
நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த கட்சித் தலைவர்களின்
கூட்டத்தில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக
ஆராயப்பட்டது.
இந்தக்
கூட்டத்தில் எந்த தேர்தல் முறையின் கீழ்
தேர்தலை நடத்துவது
என்பதில் கட்சித்
தலைவர்களுக்கிடையில் இணக்கப்பாடு ஏற்படவில்லை.
இதனால்,
எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி நாடாளுமன்ற விவாதத்தை
நடத்தி,
புதிய தேர்தல் முறையின் கீழா அல்லது
விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழா தேர்தலை
நடத்துவது என்று
முடிவு செய்வதென
தீர்மானிக்கப்பட்டது.
மாகாணசபைத்
தேர்தல்கள் புதிய தேர்தல் முறையின் கீழேயே
நடத்தப்பட வேண்டும்
என்பதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்
கருத்து என்று
இந்தக் கூட்டத்தில்
அமைச்சர் பைசர்
முஸ்தபா தெரிவித்தார்.
எனினும்,
அதற்கு சிறுபான்மைக் கட்சிகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. அத்துடன், பழைய தேர்தல்முறைப்படியே
மாகாணசபைகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும்
சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.