மைக்கெல் ஜாக்சன் தந்தை ஜோசப் ஜாக்சன் மரணம்

 பிரபல பாப் இசையின் மன்னர் மைக்கெல் ஜாக்சனின் தந்தை, ஜோசப் ஜாக்சன் நேற்று மரணமடைந்தார்.
பாப் இசையின் மன்னர் என அனைவராலும் பாராட்டப்பட்ட மைக்கல் ஜாக்சன் அமெரிக்க பாப் இசைப் பாடகர், நடன இயக்குனர், பாடல் ஆசிரியர், தொழில் தலைவர், மற்றும் வள்ளல் எனப் பல முகங்கள் கொண்டவர். இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஜுன் மாதம் 25 ஆம் திகதி உயிரிழந்தார்.
அவரது தந்தை ஜோசப் ஜாக்சன் (89) லாஸ் வேகாஸ் நகரில் தனிமையில் வசித்து வந்தார். இவரே ஜாக்சன் 5 பிரதர்ஸ் என்ற இசைக்குழுவை உருவாக்கி மைக்கெல் ஜாக்சனை இசை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அவர் கடந்த பல ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர் நேற்று மாலை உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இந்த தகவலை ஜாக்சன் குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் உறுதிசெய்துள்ளார்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top