சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல்




அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்களுக்கு எதிராக சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகவும் சம்மாந்துறையை வாழ்விடமாகவும் கொண்டுள்ள உதுமான் கண்டு நாபீர் என்பவர் விமர்சித்திருப்பது சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போன்றுதான் உள்ளது.
மக்களால் தெரிவு செய்யப்பட்டு இந்த நாட்டின் அமைச்சரவையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களில் ஒருவராக இருந்து கொண்டு பலவருடங்களாகச் சேவையாற்றிக்கொண்டிருக்கும்  அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களின் சேவைகளை இதுவரை பிரதேச சபைக்குக் கூட மக்களால்  தெரிவு செய்யப்பட முடியாத வெறும் உதுமான் கண்டு நாபீர் விமர்சிப்பது என்பது ஒரு நகைப்புக்குரிய விடயமாகவே எமக்கெல்லாம் தெரிகின்றது.
 உதுமான் கண்டு நாபீர் அவர்கள் சிலருக்கு சாப்பாடு கொடுப்பது இன்னும் சில சில்லறை உதவிகளைச் செய்துவிட்டு அரசியலுக்கு வந்துவிடலாம் என்று பகல் கனவு காண்பதின் வெளிப்பாடே அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களுக்கு எதிரான உளறுதல் என்பதை விடயம் தெரிந்த பலர் அறிந்திருந்தும் உதுமான் கண்டு நாபீர் இன்னும் புரிந்து கொள்ளாமல் இருப்பது பரிதாபத்திற்குரிய விடயமாகும்.
இதோ முக நூல் நண்பர்களின் அவர் தொடர்பான் சில பதிவுகள்.
அல் ஹபிழ் அஸாம் அப்துல் அஸீஸ்
இன்று
எதிர்பாராத விதமாக
ஒரு சந்திப்பு
நாபிர் 
என்னிடம் சொன்னார்
எதிர் வரும் தேர்தலில் SLMC சார்பாக
முதன்மை வேட்பாளராக தன்னை நிறுத்துவதற்கு பிராந்திய தலைமைகள் யோசிப்பதாக கூறினார்.
இக் கருத்தை SLMC போராளிகள்
கேள்விப்பட்டால் என்ன நடக்கும் என்று நா பிரிடம் கேட்டேன்
யோசித்தார்

Ahamed Lebbe Junaideen காலத்திற்கும் சிந்தனையற்ற சமுதாயத்திற்கும் ஏற்றால்போல் தலைவர்கள் உருவாக வேண்டாமா? அந்தவகையில் SLMC சார்பாக
முதன்மை வேட்பாளராக அவரை நிறுத்துவதற்கு பிராந்திய தலைமைகள் யோசிக்கின்றார்கள்போல் தெரிகின்றது. அல்லாஹ்தான் எமது முஸ்லிம் சமுதாயத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவேண்டும். இதுபோல் இன்னும் எத்தனையோ அதிசயங்களை நாம் கேட்கத்தான் போகின்றோம். பார்க்கத்தான் போகின்றோம். நல்லவர்கள் படித்தவர்கள் சமுதாய சிந்தனையுள்ளவர்கள் சமுதாயத்தில் புறந்தள்ளப்பட்டிருப்பதன் வெளிப்பாடே இவ்வாறானவர்கள் வெளிப்படுகின்றார்கள். இப்படியான கதைகளை முஸ்லிம் சமுதாயம் கேட்க வேண்டியுள்ளது.
 Mahsoom Ismail எல்லா நாம்பனும் வாலை கிழப்புதென்று 
வயிற்று நாம்பனும்
வாலை கிழப்பினதாம்

Hussain Ashraff இலுப்பையில ஏறியதாம் மொடப் பேய்
2


Nagoor Ariff ஆமாம். இன்று ஜும்மாத் தொழுதுவிட்டு வெளியேறுகையில் என்னிடமும் சொன்னார்.
அவருக்காக கவலைப்படுவதா அல்லது அவரை நினைத்து சிரிப்பதா என்று தெரியாமல், அவருக்கு ஒரு விடயத்தை மிகவும் அழுத்தமாக சொன்னேன். இனிமேலும் எமது மக்கள் ஏமாறுவதற்கு தயாரில்லை என்பதை சொன்னேன்.

E.L. Mohamed Mahroof சகோ.நாபிர் சம்பந்தமான பல பதிவுகளை நானும் பார்க்கின்றேன். அவைகள் அனைத்தும் அவரை அவரே தாழ்த்திக்கொள்வது போன்றே கருத்தாளப்பட்டிருக்கின்றது. அத்துடன் அதற்கான பின்னூட்டங்களில் 98% வீதமானவைகள் அவரை கிண்டலடிப்பதாகவே பதியப்படுகின்றது. இது அவரின் அறிவுக்கு தென்படாதிருப்பது அவரின் அரசியல் பயணத்திற்கு ஆரோக்கியமற்றது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top