'ஈதுல் பித்ர்' (நோன்புப் பெருநாள்)
பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
(படங்கள்)
'ஈதுல்
பித்ர்' (நோன்புப் பெருநாள் ) இன்று இந்தியா, இலங்கை நாடுகளில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி அனைத்து
பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை
நடைபெற்றது.
ஈகைத்
திருநாளாம் நோன்புப் பெருநாள் இன்று இலங்கைமுழுவதிலும் கோலாகலமாக
கொண்டாடப்படுகிறது.29 நாட்கள் நோன்பிருந்து
வழிபாடுகளில் ஈடுபட்டு, தான தர்மங்களை வழங்கி
திருமறை ஓதி
இறை உணர்வோடு
கழித்த நிலையில்,
நிறைவாக இந்த
நோன்புப் பெருநாள்
இன்று கொண்டாடப்படுகிறது.
ஒரு
மாத காலம்
கட்டுப்பாடாக வாழ உதவியதற்காகவும் இம்மாதத்தில் இறைமறையாம்
திருக்குர்ஆனை அருளியதற்காகவும் இறைவனுக்கு
நன்றி செலுத்தும்
நாள் இது.
இந்த பெருநாளை
முன்னிட்டு அனைத்து இடங்களிலும் சிறப்பு தொழுகைகள்
நடைபெற்றன. திறந்தவெளி தொழுகையும் நடைபெற்றது.
இந்த
பெருநாளில் இஸ்லாமிய பெருமக்கள் காலையில் எழுந்தவுடன்
குளித்து, புத்தாடையோ
அல்லது தங்களிடம்
இருப்பவற்றில் சிறந்த ஆடையையோ அணிந்து தொழுகைக்கு
சென்றனர். தொழுகை
நிறைவுற்றதும் மக்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி
பரஸ்பரம் வாழ்த்துக்களை
தெரிவித்தனர். மேலும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மகிழ்ச்சியை
பரிமாறிக் கொண்டனர்.
இதேவேளை, உலக நாடுகளில் வாழும் முஸ்லிம்களும் 'ஈதுல் பித்ர்' (நோன்புப் பெருநாள் ) சிறப்புத் தொழுகையுடன் கொண்டாடினர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.