கல்முனையின் தலைவிதி இதுதான்..!
கல்முனையில்
சுகாதார அமைச்சர்
ராஜிதவை கொண்டுவந்து
சேவைகளைச் செய்வதைப்போல்,
கல்வி அமைச்சர்,
விவசாய அமைச்சர்,
மீன்பிடி அமைச்சர்கள்
என்று பல
அமைச்சர்களையும் கொண்டுவந்து கல்முனையின் தேவைகளை நிவர்த்தி
செய்யக்கூடிய ஆளுமை பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்களிடம்
இருக்கின்றது என்பதை நான் பலமுறை குறிப்பிட்டு
வருகின்றேன். ஆனால் அதனைச் செய்ய அவர்
பின்னிற்பதன் உள்நோக்கம் சிலபேருக்கு தெரியாததன் காரணமாகவே
அவர் விமர்சிக்கப்படுகின்றார்.
அன்று
விளையாட்டுத்துறை அமைச்சரை அழைத்துவந்து விளையாட்டுதுறை சம்பந்தமாக
பல வாக்குறுதிகளை
கொடுத்தது மட்டுமல்ல,
அதனை ஒரு
விழாவாகவே நடத்தியும்
காட்டினார். ஆனால் அந்த விழாவுக்கு ஹக்கீம்
அவர்கள் வரவேயில்லை.
பிறகு அந்த
வாக்குகளுக்கு என்ன நடந்தது, சந்தாங்கேணி மைதானம்
என்ன நிலையில்
உள்ளது என்பதெல்லாம்
நாம் அறிந்ததே..
இந்த
நிலையில்தான் சென்றமுறை ஏ.எம்.எச்க்கு
வந்த 25கோடி
பணம் கல்முனை
ஆதாரவைத்தியசாலையை நோக்கி பயணித்துவிட்டது.
அந்த நேரம்
ஏ.எம்.எச். அபிவிருத்திக்குழு
இதுசம்பந்தமாக ஹக்கீம் அவர்களிடம் உதவி கேட்டபோதும்
அது கைகூடாமலே
போனது. அதன்
பிறகு அந்த
அபிவிருத்தி குழுவும் ஆசாத்சாலியும் ஏ.ஆர் மன்சூரும் சுகாதார
அமைச்சர் ராஜிதவிடம்
விடயத்தைக் கூறியபோது அவர் அப்படியா என்று
கேட்டுவிட்டு உங்கள் ஆஸ்பத்திரிக்கும் அந்த பணத்தை
ஒதிக்கிதறுகிறேன் என்று வாக்குறுதியளித்து அதன் படி
ஒதுக்கப்பட்ட பணத்தை பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்களின்
முயற்சியினால் அது நிறைவேற்றப்பட்டது என்பது சந்தோசமான
விடயமாக இருந்தாலும்.
இந்த கோலாகல
நிகழ்ச்சிக்கு ஹக்கீம் வராததன் நோக்கம் புரிந்தவர்களுக்கு
புரிந்திருக்கும்.
இப்படி
பல அமைச்சர்களை
கல்முனைக்கு கூட்டிவந்து பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள்
சேவைகள் பல
செய்தால் ஒருவேளை
அவருக்கு தலைவர்
மூலம் பழிவாங்கள்
நடக்கலாம் என்பதே
உண்மையாகும். இப்படி ஓடி ஓடி சேவைகள்
செய்துவிட்டு மக்கள் மத்தியிலே பேரும் புகழும்
எடுத்துக்கொண்டு கல்முனையை தன்வசம் எடுத்துக்கொண்டால் கட்சியின் நிலையும் தனது நிலையும்
கேள்விக்குறியாக மாறிவிடும் என்ற பயமே தலைவருக்கு
உள்ள பயமாகும்.
அதாவுல்லா ஹிஸ்புல்லா
அமீரலி ரிசாட்
போன்றோர் இதே
பாணியையத்தான் கடைப்பிடித்தார்கள் என்பதைக்
கொண்டே ஹக்கீம்
அவர்கள் இவர்விடயத்தில்
காய்நகர்த்துகின்றார் என்பதே உண்மையாகும்.
பிரதியமைச்சர்
ஹரீஸ் அவர்கள்
இந்த உண்மைத்தண்மையை
அறிந்ததன் காரணமாகவே
முன்வு கட்சியை
விட்டு விலகி
தேர்தல் கேட்டிருந்தார்.
அந்த தேர்தலில்
ஹரீஸ் அவர்கள்
வெற்றியடைந்திருந்தால் இன்று கல்முனையின்
நிலை எங்கோ
சென்றிருக்கும். (அதனை சிலபேர் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்).
இருந்தாலும் அதுதான் உண்மை.
அதன்
பிற்பாடு ஊர்
எக்கேடு கெட்டாலும்
பரவாயில்லை, மு.காங்கிரசில் வந்தால்தான் நாம்
எம்பியாக முடியும்
என்ற தீர்மானத்தை
எடுத்து அவர்
இன்றுவரை அந்தக்கட்சியில்
பயணிக்கின்றார். ஆனால் அவருக்கு நன்றாகவே தெரியும்,
கல்முனையில் ஓடியாடி சேவைசெய்தால் தனது சீட்டு
கிழியும் என்பது.
இருந்தாலும் ஏதோ ஒரு தைரியத்தில் ஹரீஸ்
அவர்கள் கல்முனைக்கு
சேவை செய்ய
துணிந்துவிட்டார் போலும். இதற்கு கல்முனை மக்களும்,
இறைவனும்தான் அவருக்கு உதவி செய்யவேண்டும் என்பதே
எங்களின் அவாவாகும்.
பொறுத்திருந்து பார்ப்போம்
என்ன நடக்கப்போகின்றது
என்பதை...!
-முனைமருதவன்♥-
0 comments:
Post a Comment