வழங்கிய வாக்குறுதியை காப்பாற்றுவதற்காகவே
சாய்ந்தமருது மண்ணுக்கு வருகை தந்துள்ளேன்.
அமைதியான முறையில் தேர்தலை நடாத்த உதவியமைக்கைகாக
சாய்ந்தமருது மக்களுக்கு இதயபூர்வமாக நன்றி

தேர்தல் ஆணையாளரின் நேற்றைய உரையிலிருந்து



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
சாய்ந்தமருது மண்ணுக்கு வருவதாக வழங்கிய வாக்குறுதியை காப்பாற்றுவதற்காகவே சாய்ந்தமருதுக்கு வருகை தந்துள்ளேன். அமைதியான முறையில் தேர்தலை நடாத்த உதவியமைக்கைகாக சாய்ந்தமருது மக்களுக்கு  (தலையை குனிந்து) தேர்தல் ஆணைக்குழு சார்பில் இதயபூர்வமாக நன்றி சொல்கிறேன்.
நிகழ்ச்சியை ஒழுங்கு செய்து சிறப்பாக நடத்த உதவிய சாய்ந்தமருது மக்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட சகல பொதுமக்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இது போன்று  இங்கு கோலாட்டம் ஆடிய குழுவினருக்கு விஷேட நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இது கரையோரப் பிரதேச மக்களின் கலாச்சாரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.
இந்நிகழ்வின் பின்னணியிலிருத்து செயல்பட்ட சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தினர், சாய்ந்தமருது ஜம் இய்யத்துல் உலமா சபையினர், சய்ந்தமருது – மாளிகைக்காடு பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் ஆகியோர்களுக்கும் நன்றி
எனது தனிப்பட்ட நோய்கள், குடும்பத்திலுள்ள சில பிரச்சினைகள் ஆகியவற்றினால் இவ்வைபவத்திற்கு என்னால் இங்கு வரமுடியாத நிலை ஏற்பட்டிருந்தும் கூட கடந்த பெப்ரவரி மாதம்  சாய்ந்தமருது மண்ணுக்கு வருவதாக வழங்கிய வாக்குறுதியை காப்பாற்றுவதற்காகவே இன்று இவ்விடத்திற்கு வருகை தந்துள்ளேன்.
-  கடந்த ஜனவரி மாதத்தில் பலரும் சாய்ந்தமருதில் நீதியான நேர்மையான தேர்தல் ஒன்றை நடத்தமுடியாது என்று எமக்குச் சொன்னார்கள். இந்த மக்கள் மீது நான் கொண்டிருந்த நம்பிக்கையும். இந்த ஊர் மக்கள் மீது எங்களுக்கு இருந்த நல்லெண்ணமும் இந்த மக்களோடு உரையாடி தேர்தலை நேர்மையாக நடத்திக் காட்டமுடியும்  என்று நாங்கள் நினைத்தது போல் சாய்ந்தமருது மக்கள் அமைதியான முறையில் தேர்தலை நடாத்த உதவியமைக்கைகாக சாய்ந்தமருது மக்களுக்கு  (தலையை குனிந்து) தேர்தல் ஆணைக்குழு சார்பில் இதயபூர்வமாக நன்றி சொல்கிறேன்.
இந்த வைபவத்தில் காரைதீவு மக்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கும் எங்கள் நன்றி உரித்தாகட்டும்.
12.10 க்கு நாங்கள் ளுஹர் தொழுகை நடாத்த வேண்டும். சரியாக 12.00 மணிக்கு வைபவத்தை முடிக்க வேண்டும் என எங்களிடம் கேட்கப்பட்டுள்ளது. அதன்படி இக்கூட்டத்தை 12.00 மணிக்கு நிறுத்த வேண்டும்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top