ஜீப் காம்பஸ் பெட்ராக் லிமிட்டெட் எடிஷன்
இந்தியாவில் அறிமுகம்
   
ஜீப் ஜாம்பஸ் பெட்ராக் லிமிட்டெட் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல் நிறுவனம் புதிய ஜீப் காம்பஸ் பெட்ராக் லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக் கிளை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் அறிமுகமான ஒரே வருடத்தில் 25,000 ஜீப் காம்பஸ் யூனிட் விற்பனையானதை தொடர்ந்து புதிய லிமிட்டெட் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் அறிமுகமானது முதல் ஜீப் காம்பஸ் தரம் மற்றும் டிரைவபிலிட்டி உள்ளிட்ட காரணங்களுக்காக வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
புதிய பெட்ராக் எடிஷன் மாடலில் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் படி புதிய மாடலில் 16-இன்ச், கிளாஸ் பிளாக் அலாய் வீல், பிளாக் ரூஃப் ரெயில்கள் மற்றும் மிரர் கவர்கள் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் புதிய சைடு ஸ்டெப் இன்க்ரெஸ் மற்றும் எக்ரஸ், காரில் நீலவாக்கில் டீக்கல்ள் மற்றும் முன்புற ஃபென்டர்களில் பெட்ராக் பேட்ஜிங் செய்யப்பட்டுள்ளது.
இதன் சீட் கவர்களில் பெட்ராக் பிரான்டிங் மற்றும் பிரத்யேக மேட்கள் மற்றும் ரிவர்ஸ் கேமரா உள்ளிட்டை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 2-லிட்டர், 173 பிஎஸ் டீசல் இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டிருக்கிறது. எனினும் 4x2 டிரைவ் மட்டுமே கிடைக்கிறது.
இந்தியாவில் ஜீப் காம்பஸ் பெட்ராக் லிமிட்டெட் எடிஷன் விலை இந்திய ரூபாவில் ரூ.17.53 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top