தற்போது படிப்படியாக வேரூன்றி வரும்
சமூக தொழில் முயற்சியாண்மை
-அமைச்சர் ரிஷாட் பதியுதீன்
உலக
பொருளாதார அபிவிருத்தியின்
பிரதான பாத்திரமாக
விளங்கும் சமூக
தொழில் முயற்சியாண்மை
தற்போது படிப்படியாக
வேரூன்றி வருகின்றது
என்று கைத்தொழில்
மற்றும் வர்த்தக
அமைச்சர் ரிஷாட்
பதியுதீன் தெரிவித்தார்.
பிரிட்டிஷ்
கவுன்சில் மற்றும்
ஐக்கிய நாடுகள்
சபையின் எஸ்கேப்
நிறுவனம் இணைந்து
மேற்கொண்டுள்ள தேசிய ரீதியிலான, சமூக தொழில்
முயற்சியாண்மை ஆய்வு தொடர்பான அறிக்கையை வெளியிடும்
நிகழ்வு நேற்று
கொழும்பு தாஜ்
சமுத்திரா ஹோட்டலில்
நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக
கலந்துகொண்டு அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் .
அமைச்சர்
நிகழ்வில் தொடர்ந்தும்
உரையாற்றுகையில்,
வெறுமனே
இலாபத்தை நோக்காகக்
கொண்டு ஆரம்பிக்கப்படும்
தொழில் முயற்சியாண்மையை
விட சமூக
தொழில் முயற்சியாண்மையானது
பிரதானமாக சேவைகளையும்
இலாபத்தையும் அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருவது
நமது நாட்டுக்கு
மிகவும் அத்தியவசியமானது
.விவசாய சங்கங்கள்,
தர்ம நிதியங்கள்
மற்றும் கூட்டுறவுச்சங்கங்கள்
ஆகியவற்றின் நடவடிக்கைகளால் இலங்கையானது,
சமூக தொழில்
முயற்சியாண்மையை ஒத்த நீண்ட வரலாற்றைக் கொண்டிருந்த
போதிலும் , அவை சமூக தொழில் முயற்சியாண்மை
என்ற செயற்பாட்டுத்
தளத்துக்குள் இன்னும் சரியாக உள்வாங்கப்படவில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில்
சமூக தொழில்
முயற்சியாண்மை குறித்த ஆய்வுகள் அடங்கிய அறிக்கை
ஒன்று, தேசிய
ரீதியில் வெளியிட்டு
வைக்கப்படுவது இதுவே முதற்தடவை ஆகும் என்றும்
அமைச்சர் குறிப்பிட்டார்.
விவசாயம்,
மீன்பிடி, சேவைகள்,
சுற்றுச்சூழல், கல்வி, சுகாதாரம் போன்றவையும், சமூக
தொழில் முயற்சியாண்மையை
நோக்கியே நகர்ந்து
செல்கின்றன.
இன்று
வெளியிட்டு வைக்கப்பட்ட இந்த அறிக்கையில், சுவாரஷ்யமான
பல சமூக
பொருளாதார விடயங்கள்
வெளிவந்துள்ளன. இந்த அறிக்கையானது கொள்கை ரீதியான
நமது கவனத்தை
ஈர்க்கின்றது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த
நிகழ்வில் கைத்தொழில்
மற்றும் வர்த்தக
அமைச்சின் மேலதிக
செயலாளர் தாஜுதீன்,
ஐ.நா
எஸ்கேப் நிறுவனத்தின்
புத்தாக்க வர்த்தக
முயற்சி மற்றும்
பிரதம தொழில்நுட்பவியலாளருமான
ஜொனதான் வோர்ன்,
பிரிட்டிஷ் கவுன்சிலின் இலங்கைக்கான பணிப்பாளார் கில்
கல்டிகொட் மற்றும்
சமூக தொழில்
முயற்சியாண்மைத் துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், கல்வியியலாளர்கள்
ஆகியோர் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment