24 பெண்களை திருமணம் முடித்த
முன்னாள் கிறிஸ்தவ மதகுருவுக்கு வீட்டுக் காவல்
24 மனைவிகள்
மற்றும் 149 குழந்தைகள் கொண்ட நபர் ஒருவருக்கு
பலதார மணம்
புரிந்த குற்றச்சாட்டில்
கனடா நீதிமன்றம்
ஆறு மாதம்
வீட்டுக்காவல் விதித்துள்ளது.
வின்ஸ்டன்
பிளக்மோர் என்ற
அந்த நபரின்
ஒன்பது மனைவிகள்
18 வயதுக்கு குறைந்தவர்கள் என்பதோடு இதில் நால்வர்
அவர் திருமணம்
முடிக்கும்போது 15 வயது உடையவர்களாக
இருந்திருப்பதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னாள்
கிறிஸ்தவ மதகுருவான
அவர் மீதான
தீர்ப்பு வாசிக்கப்பட்டபோதும்
நீதிமன்றத்திற்குள் அவரது உறவினர்கள்
கண்ணீர்விட்டு ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி சோகத்தை
வெளியிட்டனர்.
“இதனை
நான் மறுக்கவில்லை.
எனது மதத்தின்படி
வாழ்ந்ததால் நான் குற்றவாளி ஆக்கப்பட்டுள்ளேன் என்று மாத்திரமே கூற முடியும்”
என்று பிளக்மோர்
சி.பி.சி நியூஸ்
தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டுள்ளார்.
இதே
மதப்பிரிவை பின்பற்றும் ஜேம்ஸ் ஓலருடனேயே 61 வயது
பிளக்மோர் பிரிட்டிஷ்
கொலம்பியா நீதிமன்றத்தில்
ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.
ஓலர் ஐந்து
திருமணங்கள் முடித்ததற்காக குற்றங்காணப்பட்டார்.
அவர் மீது
மூன்று மாதம்
விட்டுக்காவல் விதிக்க உத்தரவிடப்பட்டது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.