அடிக்கல் நாட்டு விழாவுடன்
அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபன கிளை (ஓசுசல)
 ஒன்றையும் கல்முனையில் திறக்கப்பட்டிருக்கலாமே
கல்முனைப் பிரதேச மக்களின் ஆதங்கம்

இரண்டு ஆதார வைத்தியசாலைகள் அமைந்துள்ள
கல்முனையில் அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபன கிளை
(ஓசுசல) ஒன்று திறக்கப்படாதது குறித்து மக்கள் கவலை

இன்று 17 ஆம் திகதி அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் புதிதாய் அவசர விபத்துப் பிரிவு ஒன்றை சுமார் 200 கோடி செலவில் கட்டுவதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு மருத்துவமனை வளாகத்தில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
இந்நிகழ்வுக்கு சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கிழக்கு முஸ்லிம்களின் முக்கிய நகரமான (மர்ஹும் அஷ்ரப் அவர்களால் முக வெற்றிலை எனக் கூறப்பட்ட)  கல்முனையில் அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபன கிளை (ஓசுசல) ஒன்று திறக்கப்படாது இருப்பது குறித்து கல்முனை மக்கள் கவலை வெளியிட்டு வருகின்றனர்.
அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்னவின் கல்முனை வருகையோடு கல்முனையில் அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபன கிளை ஒன்றைத் திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகளை இப்பிரதேச மக்கள் பிரதிநிதிகள் எடுத்திருக்கலாம் என கல்முனைப் பிரதேச நலனில் அக்கறை கொண்டவர்கள் தெரிவிக்கைன்றனர்.
சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன அவர்களின் கல்முனை விஜயத்தில் கல்முனைப் பிரதேசத்தில் அடிக்கல் நாட்டு விழாவும் திறப்பு விழாவும் இடம்பெற்றால் மக்கள் பயன்பெற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால், அமைச்சரால் திறப்பு விழா இல்லாமல் அடிக்கல் நாட்டு விழா மாத்திரமே நடைபெறுகின்றது.
இதேவேளை,இலங்கை அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் புதிய விற்பனை நிலையம் ஒன்று மொனராகலை நகரத்தில் திறக்கப்பட்டுள்ளது
நேற்று திறக்கப்பட்ட இந்த கிளையுடன் நாட்டில் ஒசுகல கிளைகளின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. மாத்தளை, பேராதனை, தம்புள்ளை, கேகாலை ஆகிய நகரங்களிலும் இவ்வாறான விற்பனை நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
இந்த வருட இறுதிக்குள் ஒசுசல விற்பனைக் கிளைகளின் எண்ணிக்கை 50ஆக அதிகரிக்கப்படும் என்று சுகாதார போஷாக்க மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.
இப்படியான நிலையில் இலங்கையின் கிழக்கு முஸ்லிம்களின் முக்கிய நகரமான (மர்ஹும் அஷ்ரப் அவர்களால் முக வெற்றிலை எனக் கூறப்பட்ட)  கல்முனையில் அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபன கிளை (ஓசுசல) ஒன்று திறக்கப்படாது இருப்பது குறித்து கல்முனை மக்கள் கவலை வெளியிட்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டதின் கரையோரப்பிரதேசத்தில் ஒரே நேரத்தில் கல்முனை, சம்மாந்துறை,அக்கரைப்பற்று, நிந்தவூர் ஆகிய இடங்களில் அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபன கிளை (ஓசுசல) திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த்து.
நிந்தவூர், அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபன கிளை (ஓசுசல) திறக்கப்படுள்ள நிலையில் கல்முனை, சம்மாந்துறை பிரதேசங்கள் புறக்கனிக்கப்பட்டிருக்கின்றன.
கல்முனைப் பிரதேசத்தில் இரண்டு ஆதார வைத்தியசாலைகள், ஒரு மாவட்ட வைத்தியசாலை,  மூன்று பிரதேச வைத்திசாலைகள், பல தனியார் வைத்தியசாலைகள் அமைந்திருந்தும் கல்முனையில் அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபன கிளை (ஓசுசல) ஒன்று ஆரம்பத்தில் திறக்கப்படாது காலத்தைக் கடத்துவது ஏன் என இங்குள்ள மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கல்முனைப் பிரதேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதி கல்முனையில் அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபன கிளை (ஓசுசல) திறக்கப்படும் விடயத்தில் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top