ஒட்டிப் பிறந்த கன்றுக் குட்டிகள்
மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா மோகாத் தோட்டத்தில் எட்டுக் கால்களும் இரண்டு தலைகளையும் கொண்ட அதிய கன்று குட்டியொன்று பிறந்துள்ளது.
மோகா மேல் பிரிவு தோட்டத்தை சேர்ந்த சன்முகசுந்தரம் என்பரிவனால் வளர்த்து வந்த பசுவே இக்கன்றை ஈன்றுள்ளது.
எட்டுக் கால்கள், இரண்டு தலைகள் மற்றும் இரண்டு வால்களுடன் பிறந்த இக் கன்று குட்டி ஒரு சில மணித்தியாலங்களின் பின்னர் இறந்ததாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
ஒரே கருமுட்டையில் இரண்டு குட்டிகளாக பிரிகையடைந்து வளர்ந்த கன்றுக்குட்டிகள் ஒட்டி வளர்ந்தமையினால் ஏற்பட்ட விளைவே இது என கால் நடை வைத்தியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கால் நடை வைத்தியர் அலுவலகத்தின் அதிகாரிகள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில்
தாய்ப் பசுவின் வயிற்றிலிருந்து கன்றுக்குட்டிகளை வெளியே எடுத்துள்ளனர்.
கன்றுக் குட்டிகள் பிறந்த பின்னர் தாய் பசுவும் இறந்து போனதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment