அனைத்து தபால் சேவை ஊழியர்களும்
சேவைக்கு திரும்புமாறு தபால் மா அதிபர் அறிவிப்பு
பணிக்கு திரும்பாதோர் சேவையிலிருந்து விலகியதாக கருதப்படும்
தபால்
சேவை ஊழியர்கள்
அனைவரதும் விடுமுறை
இரத்து செய்யப்பட்டுள்ளதால்,
இன்றைய தினம்
(19) அனைத்து ஊழியர்களும் சேவைக்கு திரும்புமாறும், அவ்வாறு
திரும்பாதோர், பணியிலிருந்து விலகியதாக கருதப்படும் என,
தபால் மா
அதிபர் ரோஹண
அபேரத்ன அறிவித்தல்
விடுத்துள்ளார்.
குறித்த
அறிவிப்புக்கு அமைய, சேவைக்கு திரும்பாத தற்காலிக,
சேவை அடிப்படையிலான,
பதில், நிரந்தர
நியமனம் வழங்கப்படாத
ஊழியர்களின் தொழில் ஸ்திரத்தன்மை தொடர்பில், நிர்வாகம்
பொறுப்பேற்காது என, தபால் மா அதிபர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன்,
அனைத்து தபால்
அலுவலகங்களையும் திறப்பதற்கு அவசியமான, வசதிகள் மற்றும்
பாதுகாப்பை வழங்குவதற்கான பொறுப்பு, பணி அலுவலருக்கு
உரித்தாகும் எனவும் தபால் மா அதிபர்
அறிவித்தல் விடுத்துள்ளார்.
குறித்த
விடயம் தொடர்பில்,
அவசியம் ஏற்படின்
பொலிசாரின் உதவியை நாடலாம் என்பதோடு, அது
குறித்து பொலிஸ்
மா அதிபருக்கும்
அறிவித்துள்ளதாக தபால் மா அதிபர் விடுத்துள்ள
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும்
09 நாளாக இன்றைய
தினமும் (19) பணிப் புறக்கணிப்பை தொடரவுள்ளதாக தபால்
அரசாங்கம் தமக்கு
வழங்கிய வாக்குறுதியை
நிறைவேற்ற தவறியதால்
தொடர் வேலை
நிறுத்த போராட்டத்தில்
ஈடுபடப்போவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க கூட்டமைப்பின்
அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
இது
குறித்து ஜனாதிபதியின்
செயலாளர் ஒஸ்டின்
பெனாண்டோவுடன் பேச்சுவார்த்தையொன்று ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த நிலையில் அது
ஏமாற்றமாக முடிந்ததாக
அச்சங்கத்தின் உபசெயலாளர் அநுருத்த தசநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை,
நாடுபூராகவும் தபால் மற்றும் பொதிகள் விநியோகிப்பது
முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதோடு,
மத்திய தபால்
இடைப்பரிமாற்றம் உள்ளிட்ட நாடு முழுவதிலுமுள்ள தபால்
நிலையங்களில் சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான தபால்
மற்றும் பொதிகள்
நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தபால்
பணி புறக்கணிப்பு
காரணமாக தரம்
ஒன்றுக்கு மாணவர்களை
இணைத்துக் கொள்வது
தொடர்பான விண்ணப்பங்களை
ஏற்றுக்கொள்ளும் கால எல்லை ஜூலை 10 ஆம்
திகதி வரை
நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு
அறிவித்துள்ளது.
குறித்த
விடயம் தொடர்பில்
மே 31 ஆம்
திகதி கல்வி
அமைச்சினால் வெளியிடப்பட்ட குறித்த சுற்றறிக்கைக்கு அமைய,
இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கும்
வண்ணம், தங்களது
விண்ணப்பங்களை அனுப்புமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
0 comments:
Post a Comment