சவூதியில் சம்பளம் வழங்கப்படவில்லை
நீதிமன்ற வழக்கு மூலமாக 26 லட்சம் ரூபாய்
சம்பளம்கிடைத்த அதிஷ்டம்
சவூதி அரேபியாவில் 8 வருடங்கள் பணி செய்த இலங்கை பெண்ணுக்கு 26 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைத்துள்ளது.
குறித்த பெண் கடந்த 2009ஆம் ஆண்டு பணிப்பெண்ணாக சவூதி சென்றுள்ள நிலையில், அவர் பணி செய்த வீட்டின் உரிமையாளர் சம்பளம் வழங்கவில்லை.
இது தொடர்பில் குறித்த பெண்ணின் உறவினர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் முறைப்பாடு செய்தனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சவூதி தூதரகம் ஊடாக ஆராய்ந்த போது இந்த முறைப்பாடு உறுதியாகியுள்ளது.
அதற்கமைய அந்த பெண்ணுக்கு கிடைக்க வேண்டிய சம்பளத்திற்காக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனடிப்படையில்
64000 சவூதி ரியால் சம்பள பணமாக அவர் பெற்றுக் கொண்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணாயக்காரவினால் இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த அந்த பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.