2019-02-05 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில்
மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்




01.ஊழலை ஒழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 6ஆவது விடயம்)
                                                                                                                   
லஞ்சம் ஊழலை ஒழிப்பதற்காக அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களை தொடர்புப்படுத்தி பொதுவாக செயல்படுத்தும் தேசிய திட்டம் ஒன்றில் தேவையை கவனத்தில் கொண்டு ஊழலுக்கு எதிராக செயல்படுவதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டம் ஒன்றை வகுப்பதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கு அமைவாக அனைத்து தரப்பினரதும் கருத்துக்கள் ஆலோசனைகளை கவனத்தில் கொண்டு ஒழுங்குப்படுத்தப்பட்ட லஞ்சம் மற்றும் ஊழலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை 2019-2023 காலப்பகுதிக்குள் செயற்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அவர்களினால் சமர்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

02.போதைப்பொருள் பாவனையற்ற நாடொன்று என்ற போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 10ஆவது விடயம்)

பொருளாதார மற்றும் சமூக ரீதியில் சமூகத்தின் நலனுக்கு எதிராக போதைப்பொருள் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் பிடியிலிருந்து விடுபடுவதற்கான நிலையான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்காக போதைப்பொருள் ஒழிப்பு கொள்கை மற்றும் செயற்பாட்டுத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதுடன் போதைப்பொருள் பாவனையற்ற நாட்டை உருவாக்குவதற்காக போதைப்பொருள் தடுப்பு ஜனாதிபதி செயற்பாட்டு செயலணியின் இணைப்புடனும் பொலிஸ் ஒளடதக கட்டுபாட்டு சபை மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பங்களிப்புடன் போதைப்பொருள் பாவனையற்ற நாடு என்ற வேலைத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தபட்டு வருகின்றது. போதைப்பொருள் பாவனையற்ற நாடொன்றை உருவாக்குவதற்கான வேலைத்திட்டத்தை மேலும் விரிவுப்படுத்துவதற்காக போதைப்பொருள் பாவனையில் ஈர்க்கப்பட்டுள்ளவர்களை புனர்வாழ்வு அளிப்பதற்கான தேசிய அதிகாரசபை ஒன்றை அமைத்தல். மற்றும் நச்சு போதைப்பொருளை அடையாளம் காணும் புதிய தொழிநுட்ப உபகரணங்களை இறக்குமதி செய்து பயன்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரி பாலசிரிசேன அவர்கள் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03.பொலிஸ் பயிற்சிக்காக இணைத்துகொள்ளும் பிரிவு மற்றும் தொழிநுட்ப பிரிவை முன்னேடுப்பதற்கான கட்டடத் தொகுதியை சீர்செய்தல்.(நிகழ்ச்சி நிரலில் 12ஆவது விடயம்)

பொலிஸ் பயிற'சிக்காக இணைத்துக்கொள்ளப்படும் பிரிவு மற்றும் தகவல் தொழிநுட்ப பகுதியை கிருளபனை சம்புத்த ஜெயந்தி மாவத்தையில் அமைப்பதற்கு முன்னர் விலாசித்தா நிவச என்ற கட்டட தொகுதியில் நடத்தப்பட்டு வந்தது. இந்த கட்டடத் தொகுதி நீண்ட காலமாக சீர்செய்ய பாடாததினால் கடமைப் பணிகளை மேற்கொள்ளும் பொழுது எதிர்நோக்கப்படும் தடைகளை தவிர்த்துக்கொள்வதற்காக மழை மற்றும் கழிவு நீரை வெளியேற்றும் கட்டமைப்பை அமைத்தல் நீர் விநியோக கட்டமைப்பு இயற்கை கழிவு மற்றும் வடிகால் கட்டமைப்பு மின் கட்டமைப்பு ஆகியவற்றை மீளமைத்தல் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்கும் முழுமையாக சீர் செய்வதற்கும் 2020 தொடக்கம் 2022 இடைகால வரவு செலவுத்திட்டத்துக்குள் 126.8 மில்லியன் ரூபா நிதியை ஓதுக்கீடு செய்வதற்காக பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைதிரிபால சிரிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04.பயங்கரவாத செயற்பாட்டு காரணமாக ஊனமுற்று ஓய்வுப்பெற்று அல்லது விலகியிருக்கும் முப்படையைச்சேர்ந்த அங்கத்தவர்களுக்கு நிவாரணம் வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 14ஆவது விடயம்)
பயங்கரவாத நடைவடிக்கையினால் ஊனமுற்றவர்களின் ஊனமுற்ற தன்மை 50 சதவீதத்திற்கும் குறைந்ததன் காரணமாக குறிப்பிட்ட சேவை காலப்பகுதியை முழுமைப்படுத்தி ஓய்வுப்பெற்றுள்ள மூப்படையை சேர்ந்த 1573 அங்கத்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறான மேலும் ஓய்வுப்பெற்ற மூப்படையைச் சேர்ந்த 792 அங்கத்தவர்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சாவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05.இலங்கை ஜேர்மன் தொழிற்நுட்ப பயிற்சி நிறுவனத்தில் இட வசதிகளை விரிவுப்படுத்துவதற்காக காணி ஒன்றை பெற்றுக்கொடுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 20ஆவது விடயம்)

1959ம் ஆண்டில் ஜேர்மன் நிதி உதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் தற்பொழுது மோட்டார் வாகன பொறியியல் மற்றும் அதனுடன் தொடர்புப்பட்ட துறைகளில் முழுமையான 11 பயிற்சி நெறிகளை முன்னெடுத்து வருகிறது. அத்தோடு வருடாந்தம் சுமார் 600 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர். இதற்கு மேலதிகமாக குறுகிய கால 42 கற்கை நெறிகள் முன்னெடுக்கப்படுவதுடன் நிறுவனத்தில் முழுமையான கால 2000 பயிற்சியாளர்களும் 2500 க்கு மேற்பட்டோர் குறுகியகால பயிற்சிகளை பெற்றுவருகின்றனர். தற்பொழுது சுமார் 13ஏக்கர் காணியில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருவதுடன் இந்த நிறுவனத்தின் பணிகளை மேலும் விரிவுப்படுத்தி புதிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வுக்கூடம் ஆகியவற்றை நிர்மாணித்து வருடாந்தம் மேலும் சுமார் 150 பேர் பயிற்சியை பெற்றுக்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்த நிறுவனத்திற்கு அருகாமையில் உள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான 4 ஏக்கர் 15.5 பேர்ச் காணியை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. இதற்காக கௌரவ பிரதமர் மற்றும் தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி தொழிற்பயிற்சி மற்றும் திறனாற்றல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06.சேமநல திட்டத்திற்காக பயனாளிகளை தெரிவுசெய்வதற்கான நடைமுறை ஒன்றை அமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 23ஆவது விடயம்)
நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு சேமநல திட்டங்களின் கீழ் பயன்களை பெற்றுக்கொள்வதற்கு பொருத்தமான நபர்களை தெரிவுசெய்வதற்கு மிகவும் விதிமுறைகளுடனான நடைமுறை ஒன்றை ஏற்படுத்துவதற்காக சேமநல பயனாளிகளின் தகவல் கட்டமைப்பை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது இதற்கமைவாக பயனாளிகள் விண்ணபிக்கும் முறை தெரிவுக்குழு மற்றும் மேன்முறையீட்டு குழுவை அமைத்தல் அவற்றை நியமிப்பதற்கான தகுதி அந்த குழுக்களின் பொறுப்பு விண்ணப்ப படிவங்களின் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை உறுதிசெய்யும் பொழுது பயன்படுத்தவேண்டிய விதி நடைமுறை பயனாளிகளுக்கான நிகழ்ச்சி நிரலை உள்ளடக்குதல் மற்றும் மேன்முறையீடு தொடர்பில் செயல்படவேண்டிய முறை குறித்து விதிகள் முதலானவற்றை உள்ளடக்கி 2002ம் ஆண்டு இலக்கம் 24 இன் கீழான சேமலாப பயன்கள் சட்டத்தின் சரத்தின் கீழ் திருத்த சட்டம் மூலம் செய்யப்பட்டுள்ள கட்டளைகள் சட்ட திருத்த சட்டத்தை தயாரிப்பதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07.முல்லைதீவு கோக்கிலாய் புல்மோட்டை வீதியில் கோக்கிலாய் களப்பு ஊடாக கோக்கிலாய் பாலம் மற்றும் அதன் பிரவேச வீதியை நிர்மாணித்தல் ( நிகழ்ச்சி நிரலில் 25வது விடயம்)
கிழக்கு மாகாணம் மற்றும் வடக்கு மாகாணத்திற்கிடையில் கரையோரத்தில் தரையுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்காக முல்லைத்தீவு கோக்கிலாய் புல்மோட்டை வீதியை அபிவிருத்தி செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கோக்கிலாய் களப்பு ஊடாக நிர்மாணிக்கப்படவுள்ள இந்த பாலத்தின் மூலம் முல்லைத்தீவு மற்றும் புல்மோட்டைக்கிடையில் சுமார் 100 கிலோ மீற்றர் தூரம் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த திட்டத்திற்காக செக் குடியரசின் ஊளுழுடீ வங்கியிடமும் உள்ளுர் வர்த்தக வங்கியிடமும் நிதி வசதியை பெற்றுக்கொடுப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்தோடு இதற்கமைவாக வங்கியுடன் கடன் இணக்கப்பாட்டு பேச்சுவார்தையை நடத்துவதற்கான நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08.வரி தொடர்பில் இலங்கை மற்றும் யுக்ரேன் நாட்டுக்கிடையில் எட்டப்பட்ட உடன்படிக்கை (நிகழ்ச்சி நிரலில் 26வது விடயம்)
இலங்கை மற்றும் யுக்ரேனுக்கு இடையில் பொருளாதார தொடர்புகளை மேம்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக இரட்டை வரி அறவீட்டை தவிர்த்தல் மற்றும் வருமான அடிப்படையில் வரியை செலுத்துவதை தவிர்த்;தலை தடுப்பதற்காக தற்பொழுது அதிகாரிகள் மட்டத்தில் எட்டப்பட்ட உடன்படிக்கைக்கு அரசாங்க மட்டத்திலும் இணக்கப்பாட்டை எட்டப்படுவதற்காக நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09.சர்வதேச நிதியின் மூலமான மாநியத்தை பயன்படுத்தி 2019 – 2021  ஆண்டுகளுக்காக திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் ( நிகழ்ச்சி நிரலில் 28ஆவது விடயம்)
சர்வதேச ரீதியில் தாக்கமுள்ள சுகாதார பிரச்சினையான எச் வி ஃஎயிட்ஸ நோய் காச நோய் மற்றும் மலேரியா ஆகிய மூன்று தொற்று நோய்களை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டத்திற்கு நிதியை வழங்குவதற்காக சர்வதேச நிதியம் அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சினால தற்பொழுது 76 மில்லியன் ரூபா மானியத்தை பெற்றுக்கொள்வதற்கான உடன்கடிக்கை எட்டப்பட்டுள்ளதுடன் இதில் 61 மில்லியன டெரலர்களை பயன்படுத்திய தி;ட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.சர்வதேச நிதியினால் 2019-1021 கால பகுதிக்காக 12.3 மில்லியன் அமெரிக்க டோலர் ஒதுக்கபட்டுள்ளதுடன் இந்த மானியத்தை பெற்றுகொள்வதற்கான உடன்படிக்கை தொடர்பில் சுகாதாரம் போஷாக்கு வைத்திய துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10.கொலன்னாவ மழைநீர் கழிவு மற்றும் சுற்றாடலை மேம்படுத்துவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 32 வது விடயம்)

கடந்த நான்கு தசாப்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நகரமய மற்றும் போதுமான நீர் விநியோக கட்டமைப்பு இல்லாததினால் கொலன்னாவ இறங்கு துறை வருடாந்தம் வெள்ளத்திற்கு உள்ளாகின்றது. இது எதிர்கால முதலீட்டுக்கான திட்டத்துக்கும் அடிப்படை வசதி மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கும் தடையாக அமைந்துள்ளது. இதனால் களனி கங்கையுடன் நேரடியாக தொடர்புப்படும். கித்தம்பஹூ செல லிஹிணி மாவத்தை மற்றும் தடுதோட்ட வாய்கால் வீதியை அபிவிருத்தி செய்து சட்டவிரோதமாக காணிகளை மண் போட்டு நிரப்புதல் மற்றும் காணிகளை கைப்பற்றப்படுவதையும் கட்டுபடுத்த வேண்டும். இதற்கமைவாக 2019 ஆம் ஆண்டு தொடக்கம் 2022 வரையிலான காலப்பகுதியில் மழைநீரை வெளியேற்றுதல் மற்றும் சுற்றாடலை மேம்படுத்துவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மாநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11.குண்டசாலை இலங்கை கால்நடை வித்தியாலயத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் டிப்ளோமா கற்கைநெறிக்கு தேசிய தொழில் பயிற்சி தகுதி என்.வி.கியு 5 மற்றும் 6 மட்டம் வரை தரமுயர்த்தல். (நிகழ்ச்சி நிரலில் 37வது விடயம்)
அனைத்து தொழில் நுட்ப கற்கை நெறிகளுக்காக 2020ம் ஆண்டளவில் தேசிய தொழில் தகுதி பெற்றுக்கொள்ளும் தேவை இருப்பதினால் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் நடத்தப்படும் வருட கால்நடை டிப்ளோமா கற்கைநெறி தேசிய தொழில் தகுதி Nஏஞ 5மற்றும் 6 மட்டத்தில் தரம் உயர்த்த கூடியவகையில் இந்த கற்கைநெறியில் விடயத்தொடரை மேம்படுத்தல் கற்பித்தல் பயிற்சி தொகுதி அபிவிருத்தி மற்றும் தேசிய போட்டி தர அபிவிருத்திக்காக அனைத்து தேவைகளையும் பூர்த்திசெய்துள்ளது. இதற்கமைவாக இந்த கற்கைநெறி இரண்டரை வருடத்திற்கு பசு வள தயாரிப்பு தொழில்நுட்ப தேசிய உயர் டிப்ளோமாவாக முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைவாக இந்த நடவடிக்கைகளுக்கு தேவையான அடிப்படை வசதியுடன் இலத்திரனியல் கல்வி வசதியை முன்னெடுத்தல் மற்றும் பயிற்சி பண்ணைகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக விவசாய கிராமிய பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசனம் மற்றும் கடல்தொழில் நீரியியல்வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹெரிசன் அவர்கள் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12.தேசிய வீடமைப்பு கொள்கை (நிகழ்ச்சி நிரலில் 47ஆவது விடயம்)
தற்பொழுது பயன்படுத்தப்படும் தேசிய வீடமைப்பு கொள்கை சமகால அரசாங்கத்தின் இலக்குகளை வெளிப்படுத்தும் வகையிலும் நகரமய மற்றும் இயற்கை அனர்த்தங்களுக்கும் பேண்தகு மனித வீடமைப்பு அபிவிருத்தி எண்ணக்கருவை நடைமுறைப்படுத்தல் போன்ற பிரச்சனை தொடர்பில் கூடுதலாக கவனம் செலுத்தும் வகையில் திருத்தங்களை மேற்கொள்வதிலும் கவனம் செலுத்தும் பொருட்டு திருத்தத்தை மேற்கொள்வதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக தற்போதைய அமைச்சு விடயதானத்திற்கு வழங்குவதை கவனத்தில் கொண்டு பயன்படுத்தப்படும் தேசிய வீடமைப்பு கொள்கை தொடர்பில் வீடமைப்பு நிர்மாணம் மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ அவர்கள் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. 2019 – 2020 காக லிட்ரோ கேஸ் லங்கா லிமிடட் நிறுவனத்திற்கு திரவ பெற்றோலிய வாயு (எல் பி ஜி விநியோகம் தொடர்பிலான ஒப்பந்தத்தை வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 62வது விடயம்)

நாட்டில் திரவ பெற்றோலிய சந்தையில் 70 சத பங்கை கொண்டுள்ள லிட்றோ கேஸ் லங்கா லிமிடட் நிறுவனம் திரவ பெற்றோலிய வாயு (எல் பி ஜி நிறுவனம்) களஞ்சியப்படுத்துதல் நிரப்புதல் நாடு முழுவதிலும் விநியோகித்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள அரச நிறுவனம் ஆகும். நாட்டின் சந்தை தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்த நிறுவனத்திற்காக திரவ பெற்றோலிய வாயு 350 000 மெட்றிக் தொன்னை கொள்வனவு செய்வதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பெறுகை குழுவின் சிபாரிசுக்கமைய ஆஃள ழுஅநயn வுசயனiபெ ஐவெநசயெவழையெட டுவன என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14.அங்கொடை தேசிய தொற்றாநோய் வைத்திய சாலை - (.டி.எச்) வெளிநோயாளர் பிரிவி இரசாயணக்கூடம் கதிர்வீச்சிப்பிரிவு மற்றும் வாட்டுக்காக கட்டடங்களை நிர்மாணிப்பதற்கான பெறுகை (நிகழ்ச்சி நிரலில் 64வது விடயம்)

தொற்றாநோய் தொடர்பான சிகிச்சை பயிற்சி மற்றும் ஆய்வு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் மத்தியநிலையமாக அங்கொடை தேசிய தொற்றுநோய் வைத்தியசாலை விஞ்ஞானகூடத்தை (.டி.எச்) அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன்கீழ் வெளிநோயாளர் பிரிவு வார்ட் சிகிச்சை இரசாயன கூடம் மற்றும் கதிர்வீச்சி நோய் சிகிச்சை வசதியுடனான உயர்தரத்தைக் கொண்ட சுகாதார சேவை மத்திய நிலையமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கமைவாக அங்கொடை தேசிய தொற்றுநோய் வைத்தியசாலை (.டி.எச்) வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு இரசாயன கூடம் மற்றும் வார்ட்டுகளுக்காக கட்டடம் ஒன்றை நிர்மானிப்பதற்காக நிதி பெறுகை மேன்முறையீட்டு சபையின் சிபாரிசுக்கமைய ஆஃள புநழசபந ளவநரயசரயசவ நுபெiநெநசiபெ Pஏவு டவன என்ற நிறுவனத்திடம் வழங்கப்படவுள்ளது. சுகாதாரம் போசாக்கு மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சர் டொக்டர் ராஜித்த அவர்கள் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15.இலங்கை மின்சார சபையின் மவுண்டட் மின் அனல் நிலையத்திற்கு தேவையானஎரிப்பொருளை விநியோகித்தல் (நிகழ்ச்சி நிரலில் 65வது விடயம்)

மின்சார சபையின் பாஜ்மவுண்டட் மின் அனல் நிலையத்திற்கு 2018 2019 க்கு தேவையான சிலிண்டர் - எரிப்பொருள் 750000 லீட்டரை விநியோகித்தல் இந்த அனல் நிலையத்திற்கு தேவையான கட்டமைப்பு – 175000 லீட்டரை விநியோகிப்பதற்கான நிதியை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பெறுகை குழுவின் சிபாரிசுக்கமையநிறுவனத்திடம் வழங்குவதற்கு மின்சக்தி எரிசக்தி வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16.சப்புகஸ்கந்த அனல் மின் நிலையத்திற்கு மசகு எரிப்பொருளை விநியோகித்தல் (நிகழ்ச்சி நிரலில் 66வது விடயம்)
சப்புகஸ்கந்த அனல் மின் நிலையத்திற்கு வுயசழ 40ஓடு 40 800 000 லீட்ட மசகு எண்ணைணை கொள்வனவு செய்வதற்கான பெறுகை மற்றும் சப்புகஸ்கந்த மேன் அனல் மின் நிலையத்திற்கு லீட்டா வுயசழ 40ஓடு 40 மசகு எண்ணைணை 300000 கொள்வனவு செய்வதற்காக பெறுகை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகை குழுவின் சிபாரிசுக்கமைய நிறுவனத்திற்கு வழங்குவதற்காக அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17.சப்புகஸ்கந்த மின் அனல் நிலையத்தின் இயந்திர செயற்பாட்டு காலத்திற்கமைய மேற்கொள்ளவேண்டிய முக்கிய சீர்திருத்தத்திற்காக தேவையான மேலதிக உதிரிபாகங்களை கொள்வனவு செய்தல். (நிகழ்ச்சி நிரலில் 67ஆவது விடயம்)

சப்புகஸ்கந்த மின் அனல் நிலையத்தின் 5 தொடக்கம் 8 வரையிலான இயந்திரங்களின் செயற்பாட்டு காலம் 12000 மணித்தியாலயத்திற்கு பின்னர் மற்றும் 9-12 வரையிலான இன்ஜீன்களின் செயற்பாட்டு காலம் 6000 மணித்தியால செயற்பாட்டு காலத்திற்கு பின்னர் முக்கிய சீர்செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளது. இதற்கமைவாக அவ்வாறு குறிப்பிடப்பட்ட செயற்பாட்டு மணித்தியாலங்களின் பின்னர் முக்கிய புதுப்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். அவ்வாறு குறிப்பிடப்பட்ட செயற்பாட்டு மணித்தியாலயங்களுக்கு பின்னர் மேற்கொள்ளவேண்டிய புதுப்பித்தலுக்கு மேலதிக உதிரிபாகங்கள் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகை குழுவின் சிபாரிசுக்கமைய இயந்திரங்களை ஆரம்ப தயாரிப்பாளரான ஜேர்மனியின் நிறுவனத்திடம் வழங்குவதற்கான அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18.கிராமிய பாலங்களை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 68வது விடயம்)

நாட்டின் பல்வேறு பிரதேசங்களை தொடர்புப்படுத்தி போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதன் ஊடாக தேசிய அபிவிருத்தியின் பயன்களை நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களுக்கு வழங்கும் நோக்குடன் கிராமிய பிரதேசங்களில் 4000 பாலங்களை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக 9 மாகாணங்களை உள்ளடக்கிய வகையில் பல்வேறு அளவில் 175 பாலங்களை நிர்மாணிப்பதற்காக ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கலந்துரையாடல் இணக்கபாட்டு குழுவின் சிபாரிசுக்கமைய ஊடநஎநடயனெ Pசனைபந ரும டுiஅவைநன இந்நிறுவனத்திடம் ஸ்டேர்லிங் பவுண் 37.7 மில்லியனுக்கு வழங்குவதற்காக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்த்தண அவர்கள் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. இரண்டாவது ஒருங்கிணைக்கப்பட்ட வீதி முதலீட்டுக்கான ஆலோசனை சேவையை பெற்றுக்கொள்ளுதல். (நிகழ்ச்சி நிரலில் 79ஆவது விடயம்)

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதி உதவி வழங்கப்படும். 2வது ஒருங்கிணைக்கப்பட்ட வீதி முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாண கண்காணிப்பு ஒப்பந்த முகாமைத்துவம் மற்றும் ஏனையவற்றை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் அடங்களாக கிழக்கு மாகாணத்தின் திட்டதை செயற்படுத்துவதற்காக ஆலோசனை சேவையை வழங்குவதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட ஆலோசனை பெறுகை குழுவின் சிபாரிசுக்கமைய நுபளை ஐவெநசயெவழையெட புநநn வநம ஊழளெரடவயவெள Pஏவு டுவன நிறுவனத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட கூட்டு வர்த்தகத்திடம் நிறுவனத்திடம் வழங்குவதற்காக பெரும்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் கனியவள அபிவிருத்தி அமைச்சர் கபீர்ஹாசிம் அவர்கள் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

20.மரதன்கடவலஹபரணதிருக்கோடு ஆதி மடு (யு11 ) வீதியில் மரதன்கடவல தொடக்கம் ஹபரண வரையில் 25 கிலோமீற்றர் பகுதியை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்தல். (நிகழ்ச்சி நிரலில் 75வது விடயம்)
ஒருங்கிணைக்கப்பட்ட வீதி முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் மரதன் கடவல ஹபரண திருக்கோடு ஆதி மடு வீதியில் மரதன்கடவல தொடக்கம் ஹபரண வரையில் 25 கிலோமிற்றர் வீதி நிர்மாணிக்கப்பட்ட பின்னர் 5 வருட கால பராமரிப்ப உள்ளிட்ட புனரமைத்தல் மற்றும் மேம்படுத்தலுக்கான உடன்படிக்கை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் சிபாரிசுக்கமைய ஊழளெரடவiபெ நுபெiநெநசள யனெ ஊழவெசயஉவ Pஏவ டுவன நிறுவனத்திற்கு வழங்குவதற்காக பெரும்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் கனியவள அபிவிருத்தி அமைச்சர் கபீர்ஹாசிம் அவர்கள் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

21.இலங்கை போக்குவரத்து சபைக்குட்பட்ட பஸ்களுக்கு தேவையான எரிப்பொருள் மற்றும் திரவங்களை விநியோகித்தல். (நிகழ்ச்சி நிரலில் 77ஆவது விடயம்)

இலங்கை போக்குவரத்து சபைக்குட்பட்ட பஸ்களுக்கு தேவையான எரிப்பொருள் மற்றும் மநகு பொருட்களை விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகை குழுவின் சிபாரிசுக்கமைய நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜீன ரணதுங்க அவர்கள் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

22.2018-2019 பெரும்போகத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்கான நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 87ஆவது விடயம்)

2018-2019 பெரும்போகத்தில் அறுவடை பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. நெல்லுக்கு நிலையான விலையை முன்னெடுப்பதற்கும் விவசாயிகளின் நெல்லுக்கு நியாயமான விலையை வழங்குவதற்காக இந்த போகத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்கான நிகழ்ச்சி நிரல் மாவட்ட செயலாளர்களின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக நெல் சந்தைப்படுத்தும் சபை மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஒரு கிலோ சம்பா நெல்லுக்கு 41 ரூபாவும் நாடு மற்றும் ஏனைய ரக ஒரு கிலோ நெல்லுக்கு 38ரூபா உறுதிசெய்யப்பட்ட விலைக்கு நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளது. இதற்கமைவாக நெல்லை கொள்வனவு செய்வதற்கு நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்துவதற்காக 5000 மில்லியன் ரூபா நிதி வழங்கப்படவுள்ளது. இதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top