2019.02.12 அன்று நடைபெற்ற
 அமைச்சரவை கூட்டத்தில்
மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்

01. தொற்று நோயான சிறுநீரக நோய் தடுப்பு தேசிய வேலைத்திட்டம் 2019 (நிகழ்ச்சி நிரலில் 6ஆவது விடயம்)
நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் அடையாளங் காணப்பட்டுள்ள தொற்று நோயான சிறுநீரக நோயை தடுப்பதற்கான சிறுநீரக நோய் ஜனாதிபதி கூட்டு படையணி அமைக்கப்பட்டதுடன் அதன் மூலம் ஒன்றிணைக்கப்பட்ட நடவடிக்கையின் ஊடாக வௌ;வேறான அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களை இணைத்து சிறுநீரக நோய் தடுப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் மூலம் உத்தேச இலக்கை மேலும் எட்டுவதற்காக இந்த வேலைத்திட்டம் 2019ஆம் ஆண்டிலும் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அத்தோடு இதற்காக வருடாந்தம் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன் வருடாந்த செயற்பாட்டு திட்டம் குறித்துவகுக்கப்பட்டுள்ளது. இந்த வருடாந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தேவையான நிதியை பெற்றுக்கொள்ளும் பொருட்டு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. அரச துறையில் சம்பள ஆய்வுக்காக நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் துணைக்குழுவொன்றை நியமித்தல் (நிகழ்ச்சி நிரலில் 9ஆவது விடயம்)
அரச துறையில் உள்ள சம்பள கட்டமைப்பு ஆய்வு செய்து தற்பொழுது ஏற்பட்டுள்ள சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்காக தேவையான சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கு விசேட சம்பள மதிப்பீட்டு ஆணைக்குழுவொன்று  ஜனாதிபதியினால் இதற்கு முன்னர் நியமிக்கபட்டது. இதற்கமைவாக இந்த விசேட ஆணைக்குழுவினால் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்காக மேற்கொள்ள வேண்டிய சிபாரிசுகள் அடங்கிய அறிக்கை அதிமேதகு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள சிபாரிசுகள் தொடர்பில் ஆய்வு செய்து இறுதி பரிந்துரைகளை அமைச்சரவையிடம் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை துணைக்குழுவொன்றை நியமிப்பதற்கென  ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. வெள்ளம், மற்றும் மண்சரிவுகளினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை புனரமைத்தல் மீளக்கட்டியெழுப்பும் பணிகளுக்காக செலுத்தப்பட்ட கொடுப்பனவுக்கு தீர்வுகாணுதல்(நிகழ்ச்சி நிரலில் 13ஆவது விடயம்)
வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை புனரமைத்தல் மீளக்குடியமர்த்தல் பணிகள் தொடர்பில் இதுவரையில் தீர்க்கப்படாத கொடுப்பனவுகளை செலுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்களுக்கு தேவையான நிதியை வழங்கும் பொருட்டு  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. டாக்டர் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையை அரசாங்கத்தின் ரெபியா போதனா வைத்தியசாலையாக முன்னெடுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 21ஆவது விடயம்)

பெரும் எண்ணிக்கையிலான மக்களைக்கொண்ட கொழும்பு கிழக்கு கடுவலை மற்றும் மாலபே போன்ற குடியிருப்புப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு சுகாதார சேவையை வழங்குவதற்காக  டாக்டர் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையை இலங்கை ஜயவர்தனபுர பெரிய ஆஸ்பத்திரி போன்ற அரசாங்கத்தின் ரெபிய போதனா வைத்தியசாலையாக முன்னெடுப்பதற்கு தேவையான சகல வசதிகளைக்கொண்டதாக செயல்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக கொழும்பு கிழக்கு ஆதார வத்தியசாலைக்கு (முல்லேரியா வைத்தியசாலை) அமைவாக கொழும்பு கிழக்கு போதனா வைத்தியசாலையாக  டாக்டர் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையை நடத்துவதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்தன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. இலங்கையில் சமையல் எரிவாயு தரத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 24ஆவது விடயம்)
நகர்ப்புற மற்றும் அறை நகர்ப்புற பிரNதுசங்களில் இடவசதிகள் வரையறைக்கு உட்பட்டிருப்பதினால் வீடமைப்பு அரசாங்க மற்றும் வர்த்தக நிலையங்களில் உள்ள மக்கள் காற்றுமாசடைதல் சிரமங்களுக்கு எப்பொழுதும் உள்வாங்கப்படுவதினால் பாரிய சுகாதார பிரச்சனைகளுக்கு முகங்கொடுப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலையை கட்டுப்படுத்தல் மற்றும் வாயு மண்டலத்தில் தரமான நிலையை மேம்படுத்துவதற்காக கட்டிடங்களில் இடம்பெறும் எரிவாயுவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதன் முக்கியத்துவ தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் காற்று மாசடைவதினால் ஏற்படும் சுகாதார அழுத்தங்களை குறைப்பதற்காக 2019 – 2021 வருடங்களுக்கு இடையில் 3 வருட காலத்தில் உத்தேச திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. காங்கேசன் துறைமுகத்தை புனரமைத்தல் ((நிகழ்ச்சி நிரலில் 26ஆவது விடயம்)

காங்கேசன்துறை துறைமுகம் வணிக துறைமுகமாக மேம்படுத்தவதன் மூலம் இலங்கை பிராந்திய சமுத்திர கேந்திர நிலையமாக தரமுயர்த்தும் முயற்சிக்கு கிடைக்கும் பின்புலம் மற்றும் அதனை வணிக துறைமுகமாக அபிவிருத்தி செய்வதன் மூலம் வடக்கு பிரதேச வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு பெற்றுக்கொள்ளக்கூடிய பங்களிப்புகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக இந்த துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்குத் தேவையான காணியைப் பெற்றக் கொள்ளுதல் அடிப்படை வசதிகள் மற்றும் ஏனைய மூலோபாய வசதிகளை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதே போன்று இந்த பிரதேசத்தில் பொருளாதார அபிவிருத்திக்கு அமைவாக மத மற்றும் சமூக அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக இந்த பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐயனார் ஆலயத்தை புனரமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது, இதற்கமைவாக சம்பந்தப்பட்ட பணிகளை மேற்கொள்வதற்குதேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க அவர்கள் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது,

07. இலங்கை சுங்கப் பகுதிக்கு கொள்கலன் விநியோக கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு கட்டமைப்பு (நிகழ்ச்சி நிரலில் 32ஆவது விடயம்)

நிறுவனமயப்படுத்தப்பட்ட கொள்கலன் 1150 தொடக்கம் 1450 மற்றும் ஏறறுமதி செய்யப்பட்ட 350 தொடக்கம் 450 வரையில் மாத்திரம் ஒரு நாளில் இலங்கை சுங்கப் பகுதி திணைக்களத்தினால் கையாளப்படுகிறது. இதன் போது சம்பந்தப்பட்ட பொருட்களை நிறுவனங்களுக்கு விநியோகிப்பதற்காக பிரதான பல்வேறு இடங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன் சில கூடுதலான அவதானத்துடன் பொருட்களை தொடர்ந்தும் பரீசோதித்தல் மற்றும் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படும் இந்த பொருட்களின் பாதுகாப்புக்காக கொள்கலனின் கதவு உள்ளிட்டவை தற்போதைக்கு பொருந்தும் வகையில் இந்த பணிகள் நவீனமயப்படுத்தப்பட வேண்டியுள்ளது இதற்கமைவாக கொள்கலன்களை ஏற்றிச் செல்லுதல் மற்றும் கண்காணிப்பதற்கான நவீன தொழில்நுட்ப அறிமுகப்படுத்தவதற்கும் அதன் மூலம் கொள்கலன்களில் உள்ளடக்கப்பட்டுள்ள பொருட்கள் தொடர்பில் தொடர்ந்தும் மேற்கொள்வதற்கும் கொள்கலனில் உள்ள சர்வதேச ரீதியிலான அழுத்தங்களை உரியமுறையில் அடையாளங் காண்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதே போன்று கொள்கலன்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்குத் தேவையான நவீன பாதுகாப்பு உபகரணங்களைக் கொண்ட நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு தகுதியான விநியோகஸ்தர் ஒருவரை தெரிவு செய்வதற்கு பெறுகை அலுவல்களை ஆரம்பிப்பதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. மண்சரிவுஅனர்த்தத்தை குறைப்பதற்கான திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 33ஆவது விடயம்)
சமீப காலத்தில் மண்சரிவுகள் அதிகரிப்பது அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் இந்த மண்சரிவு காரணமாக உயிர் மற்றும் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் பொருளாதார மற்றும் சமூக விடயங்களுக்கும் தடை ஏற்பட்டுள்ளது, மண்சரிவை தடுப்பதற்காக சில காலங்களில் குறுகிய கால மூலோபாய செயற்பாடுகள் இதுவரையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதற்காக நிரந்தர செயற்பாடுகள் மூலம் மண்சரிவு அனர்த்;தத்தை கட்டுப்படுத்துவதற்கான திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் மண்சரிவு அனர்த்தம் பெருமளவில் உள்ள 27 இடங்களும் இரண்டாம் கட்டத்தின் கீழ் மலையக ரயில் பாதையில் உள்ள 20 இடங்களும் அதிக அனர்த்தத்துடனான 120 இடங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. 110 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுடன் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப மனித வள அபிவிருத்தித் திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 36ஆவது விடயம்)
நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு உயர்கல்விக்கான சந்தர்ப்பத்தை விரிவுபடுத்தும் நோக்கில் களனி பல்கலைக்கழகம் ரஜரட்ட மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்ப பீடங்களை அமைப்பதற்கும் ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு கல்வியாண்டில் 830 மாணவர்களுக்கு உயர்கல்விக்கான சந்தர்ப்பம் கிடைக்கும். 26400 மில்லியன் ரூபா முதலீட்டுடன் மாணவர்களின் வசதிகளுக்கான தேவையான நவீன வசதிகளைக்கொண்ட கட்டடத்தொகுதி உள்ளிட்ட வசதிகளை வழங்குவதற்காக உத்தேச விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப மனிதவள அமைச்சரும் நகர திட்டமிடல் நீர் விநியோகம் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. வெலிவிட்ட நீர்விநியோகத் திட்டத்திற்கு காணியைப் பெற்றுக்கொள்ளல். (நிகழ்ச்சி நிரலில் 37ஆவது விடயம்)
அத்துருகிரிய ஹோமாகம கடுவலை மாலபே பன்னிபிட்டிய மாறகம தெஹிவளை கோட்டே மற்றும் பத்தரமுல்லை போன்ற பிரதேசங்களில் எதிர்கால நீர்த்தேவையை பூர்த்தி செய்வதற்கான முக்கிய திட்டம் என்ற ரீதியில் வெலிவிட்ட நீர்விநியோகத் திட்டம் அடையாளங் காணப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள வெலிவிட்ட பிரதேசத்தில் கோபுரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு ஹோகந்தர சுரங்க நீர்த்திட்டம் மற்றும் ஜயவர்த்தனகம நீர் விநியோக பகுதி ஆகியவற்றை நிர்மாணிப்பதற்குத் தேவையான காணியைப் பெற்றக்கொள்வதற்காக நகர திட்டமிடல் நீர் விநியோகம் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. சட்டபூர்வமான (அட்டோனி) அனுமதிபத்திர கட்டளைச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 38ஆவது விடயம்)
போலி ஆவணங்களை பதிவு செய்து உறுதிப்படுத்துவதை தடுப்பதற்கு போலி ஆவண அடிப்படையில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதை தடுப்பதற்கும் மோசடி நடவடிக்கையை தடுப்பதற்குமான நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அட்டோனி அனுமதி பத்திரமொன்றை எழுதி உறுதிசெய்தல் பதிவு செய்தல் ரத்து அல்லது வழுவற்றதாக உறுதிசெய்தல் ரத்து அல்லது வலுவற்ற செயற்பாட்டு முறை தகவலுடனானது என்பதை உறுதி செய்தல் ஆகியவற்றை மிகவும் பயனுள்ள வகையில் மேற்கொள்ளக்கூடியதாக அடோனி அனுமதி பத்திர கட்டளைச்சட்டத்தில் திருத்தத்தை மே;கொள்வதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக திருத்த சட்டமூல தயாரிப்பின் மூலம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்த சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு உள்ளக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்களினாலும் நீதிமன்ற சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. களனி கங்கை வெள்ளப் பாதுகாப்பு கட்டிடத்தின் அடிப்படை விரிவான பொறியியியல் திட்டத்திற்கு தேவையான புவி விஞ்ஞான ஆய்வை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 50 ஆவது விடயம்)

உத்தேச களனி கங்கை இறங்குத்துறைக்கு அருகாமையில் வெள்ளநிலையை கட்டுப்படுத்துவதற்காக காலநிலை தாக்கத்தை குறைப்பதற்கான திட்டத்தின் கீழ் உத்தேச களனி வெள்ளப் பாதுகாப்புகட்டிடத்தின் ஆரம்ப விரிவான பொறியியல் திட்டத்திற்கு தேவையான புவி விஞ்ஞான ஆய்வு பணிகளை தேசிய கட்டடிட ஆய்வு நிறுவனத்தின் மூலம் துரிதமாக நிறைவேற்றிக் கொள்வதற்காக விவசாய கிராமிய பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி மற்றும் கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹெரிசன் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் குறைந்த வருமானம் மற்றும நடுத்தர வீடமைப்பு அபிவிருத்தி (நிகழ்ச்சி நிரலில் 57ஆவது விடயம்)

அம்பாந்தோட்டை மக்கள் அதிகமுள்ள பிரதேசதங்களில் உரிய சுகாதார வசதிகள் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு தேவையான காணி இல்லை. கடற்றொழில் சமூகத்தினர் வாழும் பிரதேசங்களில் வீடமைப்பு நிர்மாண வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக அடையாளங் காணப்பட்டுள்ள கோஹோலங்கல பிரதேசத்தில் 7 ஏக்கர் காணியும் தங்காலை பிரதேசத்தில் 60பேர்ச் காணியிலும் குறைந்த வருமானத்தை கொண்டவர்களுக்கு 310வீடுகளும் நடுத்தர வருமானத்தை கொண்ட பயனாளிகளுக்கு 56 வீடுகளும் அமைக்கப்படவுள்ளன. இந்த திட்டத்திற்காக கொள்கை ரீதியிலான அனுமதியை பெற்றுக்கொள்ளும் பொருட்டு வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. பயணிகள் போக்குவரத்து அனுமதி பத்திரம் வழங்கும் நடைமுறையை மதிப்பீடு செய்தல் மற்றும் புதிய வேலைத்திட்டத்தை வகுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 53ஆவது விடயம்)

அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அனுமதி பத்திரம் வழங்கப்பட்டதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை மதிப்பீடு செய்து பஸ்களுக்கு போக்குவரத்து அனுமதி பத்திரத்தை வழங்குவதற்காக புதிய நடைமுறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் சம்பந்தப்பட்ட தரப்பினரைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் பாரிய தவறுகள் பலவற்றுக்காக அறவிடப்படும் தண்டப்பண சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 62ஆவது விடயம்)

வீதி விபத்துக்களுக்கு பெருமளவிலான காரணமாக அமையும் பாரிய தவறுகள் சிலவற்றுக்;கான தண்ட பணத்தை அதிகரிப்பதற்காக இதற்கு முன்னர் பரிந்துரைக்கப்பட்ட போதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் பல்வேறு தரப்பினரினால் தெரிவிக்கப்பட்ட விடயங்களை கவனத்திற்கொண்டு அதிமேதகு ஜனாதிபதியினால் இது தொடர்பில் கவனம் செலுத்தி சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்த குழுவினால் வாகன விபத்துக்கு பாரியளவிலான பத்து தவறுகள் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன். இந்த தவறுகளுக்கான தண்டப்பணம் சட்டத்தை திருத்துவதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள திருத்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதனைத் தொடர்ந்து அனுமதிக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக போக்குவரத்து மற்றம் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. பொதுநலவாய ஒன்றியத்தின் நீதியமைச்சர்களின் சந்திப்புக்கான அனுசரனையை வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 65ஆவது விடயம்)
பொதுநலவாய ஒன்றிய நாடுகளின் நீதியமைச்சர்களினதும் சட்டமா அதிபர்களின் பங்களிப்புடன் நடைபெறவுள்ள பொதுநலவாய ஒன்றியத்தின் நீதியமைச்;சர்களின் சந்திப்புக்கு இலங்கையினால் அனுசரனை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது, இதற்காக தேவையான வசதிகளை மேற்கொள்ளும் பொருட்டு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரலை அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. புவி விஞ்ஞான ஆய்வு மற்றும் கிடங்கு அகழ்வு பணியின் போது புவி அதிர்வு சுனாமியை அவதானிக்கும் மத்திய நிலையம் மற்றும் விஞ்ஞானக் கூட கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் (நிகழ்ச்சி நிரலில் 73ஆவது விடயம்)
புவி விஞ்ஞான ஆய்வு மற்றும் கிடங்கு அகழ்வு பணிகளின் போது பூமியதிர்வு சுனாமி ஆகியவற்றை கண்காணிக்கும் மத்திய நிலையம் மற்றும் விஞ்ஞான கட்டடிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய மத்திய பொறியியல் சேவை (தனியார்) நிறுவன (ஊநுளுடு)த்திற்கு 383.2 மில்லியன் ரூபாவினை வழங்குவதற்காக மகாவலி அபிவிருத்தி திட்டம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18.இலங்கை மத்திய வங்கியின் நிதி செயற்பாட்டை செயல்திறன் மிக்கதாக்குதல் - (நிகழ்ச்சி நிரலில் 74ஆவது விடயம்)
இலங்கையில் நிதி பரிவர்த்தனை அதிகரிப்பு காரணமாக இலங்கை மத்திய வங்கியின் நிதி செயற்பாட்டிற்கு தற்பொழுது கொள்வனவை மேம்படுத்தும் தேவை அடையாளங் காணப்பட்டுள்ளது. இதற்காக முன்னெடுக்கப்படவுள்ள இலங்கை மத்திய வங்கியின் நிதி செயற்பாட்டு செயல்திறனை முன்னெடுக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. அநுராதபுரம் மற்றும் மன்னார் மின்தொகுப்பு கிரீட் துணை மின் நிலையங்களை மேம்படுத்துவதற்கான திட்டம். (நிகழ்ச்சி நிரலில் 76ஆவது விடயம்)

புதிய அநுராதபுரம் மின்தொகுப்பு கிரிட் துணை நிலையம் 220 கிலோ வோட்ஸ் மெகாவாட்250 வலுiவுக்கொண்டதாக மாற்றக்கூடிய மற்றும் சமாந்தரமாக ரீஅக்டர் மற்றும் மன்னார் கிரிட்ட துணை நிலையத்தின் 220 கிலோவோட்ஸ், மெகாவாட் 50 வலுவுடன் மாறக்கூடிய சமாந்திரமான ரியேக்டரை பொருத்தவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய ளுநைஅநளெ டுவன மற்றும் னுஐஆழு (Pஏவு) நிறுவனங்களுடன் எட்டப்பட்ட உடன்பாட்டுக்கு அமைய வழங்குவதற்காக மின்சக்தி எரிசக்தி வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

20. கம்பஹா மாவட்ட செயலகத்திற்கு நவீன கட்டிட தொகுதியை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 77ஆவது விடயம்)
கம்பஹா மாவட்ட செயலகத்திற்கு பதிய கட்டிட தொகுதியொன்றை திட்டமிட்டு தீர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பெறுகைக்குழுவின் சிபரிசுக்கமைய 3 054.2மில்லியன் ரூபாவிற்கு சன்கேன் கன்ஸ்ரக்ஷன் தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதற்காக உள்ளக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

21. கதிர்காமம் மற்றும் கெபிலித்த பிரதேசங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 80ஆவது விடயம்)
பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கௌரவத்துக்கு பாத்திரமான கதிர்காமம் புனித பூமி நகரம் பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளைக் கவர்ந்துள்ள புனித நகரமாகும் வார இறுதி நாட்களில் 10 000 இற்கு மேற்பட்டவர்கள் இந்த புனித நகரத்திற்கு வருகைத் தருகின்றனர். அத்தோடு பெரஹர காலப்பகுதியில் நாளொன்றிற்கு 5 இலட்சத்திற்கு மேற்பட்டோர் வருகை தருகின்றனர் .பக்தர்களினதும் சுற்றுலா பயணிகளினதும் பயன்பாட்டிற்காக கதிர்காமம் மற்றும் கெபிலித்த பிரதேசங்களில் 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுகாதார வசதிகளை முன்னெடுப்பதற்காக பெருநகர மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

22. மாத்தறை அக்மன வீதியில் முதல் 2 கிலோ மீற்றர் பகுதியை விரிவுபடுத்தல் மற்றும் மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 84ஆவது விடயம்)
மாத்தறை அக்மன வீதியில் 24.14 கிலோ மீற்றர் பகுதியை மேம்படுத்துவதற்காக எட்டப்பட்டுள்ள தீர்மானத்திற்கு அமைய இந்த வீதியை மேம்படுத்துவதற்கு சிபாரிசு செய்யப்பட்டிருந்த போதிலும் பல்வேறு நடைமுறை பிரச்சனை கரணமாக இந்த வீதியில் ஆரம்ப 2 கிலோ மீற்றர் பகுதியை மேம்படுத்தவதற்கான பணி தாமதமடைந்துள்ளது. 2020ஆம் ஆண்டளவில் திறக்கப்படவுள்ள தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை நீடிப்பதற்கு வசதியான பிரவேச வழியை ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ள இந்த வீதி மாத்தறை நகர பிரதேசத்தில் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் எதிர்பார்ப்பையும் கொண்டுள்ளது. இதற்கமைவாக 869 மில்லியன் ரூபா நிதி ஒதுககீட்டை மேற்கொண்டு மாத்தறை அக்மன வீதியில் முதல் 2 கிலோமீற்றர் பகுதியை அபிவிருத்தி செய்வதற்காக
நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷீம் அவர்கள் முன்மொழிந்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது,

23. இரத்தினபுரி நகரில் குறுக்கு வீதி ஒன்றை (டீலியளள சுழயன ) பாதையொன்றை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 85ஆவது விடயம்)
கொழும்பு - இரத்தினபுரி வெள்ளவாய மட்டக்களப்பு வீதியில் இரத்தினபுரி நகரத்தின் ஊடாக திவனக்கிடையில் வாகன நெரிசலின் காரணமாக வாகன போக்குவரத்துக்கு பெரும் தாமதம் ஏற்படுகின்றது. இதனால் ஏற்படுகின்ற எரிபொருள் வீண்விரயம் மற்றும் சுற்றாடல் மாசடைவதன் காரணமாக பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். வாகன நெரிசலுக்கு மேலதிகமாக அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தின் காரணமாக இந்த வீதியில் போக்குவரத்துககும் தடை ஏற்படுகின்றது. இதற்கு தீர்வாக இந்த நகர பிரதேசத்தை தவிர்த்து வெள்ள நிலைமைக்கு மேலாக வெளியேறக்கூடிய வகையில் குறுக்கு வீதி ஒன்றை அமைப்பதற்கு பரிந்துரைக்கப்படுகின்றது. இதற்கமைவாக வெரலுபே இருந்து வரக்காகொட பாலம் வரையில் நான்கு நிரலைக்கொண்ட 2.2 கிலோமீற்றர் குறுக்கு வீதி ஒன்றை நிர்மாணிப்பதற்கும் இந்த குறுக்கு வீதியில் 900மீற்றர் நீளத்தைக் கொண்ட மூன்று பாலங்களை நிர்மாணிப்பதற்கும் பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் கனியவள அபிவிருத்தி அமைச்சர் கபிர் ஹாஷீம் அவர்கள் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

24.மன்னார் மற்றும் காவேரி படுகைக்கு அருகாமையில் எரிப்பொருள் மற்றும் எரிவாயு ஆய்வுக்காக விமானத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மிதவை நடைமுறை ஆய்வை மேற்கொள்ளுதல். (நிகழ்ச்சி நிரலில் 86வது விடயம்)
காவேரி படுகைத்துறை மற்றும் மன்னார் படுகைக்கு அருகாமையில் அமைந்துள்ளதாக கருதப்படும் இருப்பு கனியவளம் எரிப்பொருள் மற்றும் இயற்கை எரிவாயு மிதப்புத்தன்மை தொடர்பாக இலங்கையின் கரையோரத்தில் விமானத்தின் மூலம் மேற்கொள்வதற்குள்ள விஞ்ஞான ஆய்வுக்காக நிறுவனமொன்றை தெரிவுசெய்வதற்கான ஆலோசனை கோருவதற்கு அமைய இந்த ஆய்வை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கலந்துரையாடல் இணக்கப்பாடு குழுவின் சிபாரிசுக்கமைய டீநடட பநழளியஉ டுவன என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் கனியவள அபிவிருத்தி அமைச்சர் கபிர்ஹாசீம் அவர்கள் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

25.இளைஞர் விவசாய கூட்டுறவு கிராம வேலைத்திட்டத்தினூடாக கிராம இளைஞர் யுவதிகளை மேம்படுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 93வது விடயம்)
யோவுன்புர 2019 என்ற இளைஞர் முகாம் தேசிய வேலைத்திட்டம் மார்ச் மாதத்தில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நடத்தப்படவுள்ளது அத்தோடு இதற்கமைவாக செயற்பாட்டு நடவடிக்கைகளுக்காக கிராம இளைஞர் பிரிவை இணைத்துக்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது இதற்கமைவாக தேசிய தயாரிப்பு செயற்பாடுகளுக்கு பங்களிப்பை வழங்கக்கூடிய திருமணம் முடிக்காத இளைஞர் யுவதிகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் உன்னதமான ஊக்குவிப்பாக தமது வீட்டை நிர்மாணித்து கொள்வதற்காக 15பேர்ச் காணியும் விவசாய பணிகளுக்காக 40 பேர்ச் உற்பத்தி காணியும் இவர்களுக்கு தேவையான வழிகாட்டிகளையும் வழங்குவதற்கும் இளைஞர் விவசாய கூட்டுறவு கிராம வேலைத்திட்டத்திற்கு ஊடாக இவர்களின் தேசிய பொருளாதாரத்துக்கு பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்காக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

26.பேண்தகு சுகாதார தீர்வு தொடர்பான பிராந்திய மாகாநாட்டை இலங்கையில் நடத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 95வது விடயம்)
சுகாதார தொடர்பான தெற்காசிய வலய புரிந்துணர்வு மகாநாட்டுக்கு பிராந்திய மத்திய நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்படும். பேண்தகு சுகாதார தீர்வு தொடர்பான பிராந்திய மகாநாடு இலங்கையின் அனுசரனையுடன் 2019ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 திகதி தொடக்கம் 23 வரை இலங்கையில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதற்காக தெற்காசிய வலய நாடுகளின் பிரதிநிதிகள் இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இத்துறையில் ஈடுபட்டுள்ள தேசிய மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற அமைச்சின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் நடத்தப்படவிருப்பதாக நகரத்திட்டம் நீர் விநியோகம் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூம் ஹகிம் அவர்களினால் சமர்பிக்கப்பட்ட ஆவணத்தை அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளத

27.சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு துரிதமாக நிவாரணம் வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 102வது விடயம்)
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களினால் பெறப்பட்டுள்ள கடனுக்கான தவணை கட்டணத்தை செலுத்துவதில் சிரமங்கள் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான போதுமான வளம் இல்லாமை உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக இந்த அரிசி உரிமையாளர்கள் எதிர்கொண்டுள்ள சிரமங்களை தவிர்த்து இவர்களுக்கு துரிதமாக நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் அங்கத்தவஆலை உரிமையாளர் ஊடாக விவசாயிகளின் நெல்லை கொள்வனவு செய்வதற்காக நிதியை வழங்குவதற்கும் இந்த நிதியை பயன்படுத்தி தமது நடப்பு மூலதன தேவையை பூர்த்தி செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய வருமானத்தின் ஊடாக கடனை திருப்பி செலுத்தும் முறை ஒன்றை அறிமுகம் செய்வதற்குமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

28. .உள்ளுர் பலசரக்கு மற்றும் அதனுடன் தொடர்புப்பட்ட தயாரிப்பு தொழிற்துறைக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்காக வௌ;வேறு நடைமுறையின் மூலம் பலசரக்கு பொருட்களை இறக்குமதி செய்வதை இடைநிறுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 104 ஆவது விடயம்)
இறக்குமதி மிளகு மற்றும் கறுவா இந்தியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்தல் இறக்குமதி சாதிக்கா மற்றும் புளி பாகிஸ்தானுக்கு மீள் ஏற்றுமதி செய்தல் மற்றும் இலங்கையின் கறுவாவை மோசடியான வகையில் ஏற்றுமதி செய்தல் போன்ற காரணங்களினால் உள்ளுர் பலசரக்கு மற்றும் அதனுடன் தொடர்புப்பட்ட தயாரிப்பு தொழிற்துறைக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஏற்றுமதியை திட்டமிடுவதற்காக தற்காலிக இறக்குமதியை மேற்கொள்ளுதல் வர்த்தகம் மற்றும் வணிக கேந்திர நிலையமாக முன்னெடுத்தல் போன்ற நடைமுறையின் மூலம் இலங்கைக்கு மிளகு சாதிக்கா புளி மற்றும் கறுவா இறக்குமதியை இடைநிறுத்துவதற்கும் இலங்கையிலிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு மீள் ஏற்றுமதி செய்யப்படும் மேலே குறிப்பிடப்பட்ட இறக்குமதி பலசரக்கு இலங்கை தயாரிப்பாக பதிவாவதை தடுப்பதற்கு தேவையான மூல உபாயம் ஒன்றை நிலைநிறுத்துவதற்கும் அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவீக்கிரம அவர்கள் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

0 comments:

Post a Comment

மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top