71ஆவது தேசிய
சுதந்திர தின நிகழ்வில்
முகமன் தெரிவிக்கும்போது
கடினப்பட்டு
சிரித்துக் கொண்ட ரணில் - மைத்திரி
இலங்கையின் 71ஆவது
தேசிய சுதந்திர
தின நிகழ்வு
ஜனாதிபதி தலைமையில்
கொழும்பு காலிமுக
திடலில் இன்று
நடைபெற்றிருந்தது.
குறித்த நிகழ்வில்
மாலைத்தீவின் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்த நிலையில்,
பிரதமர், அமைச்சர்கள்,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.
இந்த நிலையில்
பிரதமர் ரணில்
விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வரவேற்றுள்ளார்.
எனினும் இந்த
வரவேற்று புகைப்படமானது
சமூக வலைத்தளங்களில்
வைரலாகியுள்ளதுடன், இது குறித்து
பல்வேறு தரப்பினரும்
தமது கருத்துக்களை
வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில்
ஒக்டோபர் 26 அரசியல் சதியானது முறியடிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்
கட்சியினர் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்ற போதும்
அரசியல் முறுகல்
நிலை தீராத
நிலையிலேயே உள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில்
குறித்த முகமன் (உபசாரமொழி) வரவேற்பானது சம்பிரதாயத்திற்காக மாத்திரம் மேற்கொள்ளப்பட்ட போதும், ஜனாதிபதி
மற்றும் பிரதமர்
கடினப்பட்டு சிரித்துக் கொண்டதாக அரசியல் ஆய்வாளர்கள்
தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment