கோலாகலமாக நடந்து முடிந்த
சவுந்தர்யா - விசாகன் திருமணம்..!!
(படங்கள்)

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் இன்று (பெப்ரவரி 11) திருமணம் நடைபெற்றது.

கிராபிக் டிசைனர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பல திறமைகள் கொண்டவர் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா. இவருக்கும், தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக செளந்தர்யாவும் அஸ்வினும் பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில், நடிகரும் தொழிலதிபருமான விசாகனுக்கும் செளந்தர்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. விசாகனும் ஏற்கெனவே திருமணமாகி, விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 8-ம் தேதி, கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் செளந்தர்யா - விசாகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் செளந்தர்யா - விசாகன் திருமணம் இன்று நடைபெற்றது.












0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top