கிழக்கின் முன்னாள் முதலமைச்சர்
மக்கள் மத்தியில்அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக
அரசியல் அவதானிகள்
தெரிவிப்பு
கிழக்கு
மாகாண முன்னாள்
முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய
தினம் மக்கள்
மத்தியில் வைத்து
அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள்
தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு,
ஏறாவூர் ஆதார
வைத்தியசாலையின் கட்டடமொன்றுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
நேற்றைய தினம்
இடம்பெற்றிருந்தது.
இந்த
நிகழ்வில் அமைச்சர்
ராஜித சேனாரத்ன,
இராஜாங்க அமைச்சர்களான
அலிஸாஹிர் மௌலானா,
பைஸல் காஸிம்
மற்றும் கிழக்கு
மாகாண முன்னாள்
முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் உள்ளிட்ட
பலர் கலந்து
கொண்டிருந்தனர்.
இந்த
நிலையில் நிகழ்வை
முன்னிட்டு அதிதிகள் அடிக்கல் நாட்டும் இடத்தினை
நோக்கி வருகை
தந்த போது
கிழக்கு மாகாண
முன்னாள் முதலமைச்சர்
நஸீர் அஹமட்டிற்கு
அவரின் ஆதரவாளர்கள்
சிலர் மாலையிட
சென்ற சந்தர்ப்பத்தில்
அங்கு அமைதியின்மை
ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து
அடிக்கல் நாட்டும்
நிகழ்வின் பின்னர்
அமைச்சர் ராஜித
சேனாரத்ன கருத்து
தெரிவிக்கையில்,
இந்த
வைத்தியசாலைக்கு இதற்கு முன்னரும் அடிக்கல் நாட்டி
முன்னாள் முதலமைச்சர்
நஸீர் அஹமட்
இதனை நிர்மாணிக்க
முயற்சித்து நிதியும் ஒதுக்கினார். ஆனால் முடியவில்லை
என குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை
இராஜாங்க அமைச்சர்
அலிஸாஹிர் மௌலானா
கூறுகையில்,
சில
நேரங்களில் பணம் ஒதுக்காமலேயே அடிக்கல் வைத்த
காலங்களும் இருக்கின்றது. ஆனால் நாங்கள் பணத்தை
ஒதுக்கிவிட்டு அந்த பணத்தை தந்த சீனர்களுடன்
வந்து இந்த
கட்டடத்திற்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்திருக்கின்றோம்.
இது தான்
எங்களுக்கு தேவை. படங்காட்டுவது அல்ல என
கூறியிருந்தார்.
சீன
அரசாங்கத்தின் 234 மில்லியன் ரூபா
நிதி ஒதுக்கீட்டில்
மட்டக்களப்பு, ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கான குறித்த கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதேவேளை
கடந்த 2017ஆம்
ஆண்டு எட்டாம்
மாதம் 20ஆம்
திகதி கிழக்கு
மாகாணத்தின் அப்போதைய முதலமைச்சர் நஸீர் அஹமட்
தலைமையில் குறித்த
கட்டடத்திற்காக அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.
இவ்வாறான
நிலையில் மக்கள்
முன்னிலையில் அலிஸாஹிர் மௌலானா கருத்து தெரிவிக்கும்
போது இந்த
கட்டடத்திற்காக ஏற்கனவே அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில்
கட்டடம் நிர்மாணிப்பதற்கான
எந்த வித
நடவடிக்கையும் எடுக்கப்பப்படவில்லை என்பதையும்,
மீண்டும் அடிக்கல்
நாட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து முன்னாள்
முதலமைச்சர் நஸீர் அஹமட்டை அவமானப்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment