ஜனாதிபதியின் விமர்சனம்
மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்ப்பு



இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மீது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம, ஜனாதிபதியின் அநியாயமான விமர்சனங்களால் ஆழ்ந்த கவலையும் மனச்சோர்வும் அடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி சிறிசேன, மாலியில் .நா அமைதிப்படையில் பணியாற்றிய இரண்டு இலங்கை படையினர் கொல்லப்பட்டமைக்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தாமதமான செயற்பாடே காரணம் என்றும், அகுணகொல பெலஸ்ஸ சிறைச்சாலையில் சிறப்பு அதிரடிப்படையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்த எடுத்த நடவடிக்கையை மனித உரிமை ஆணைக்குழு தடுத்து விட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

இதுகுறித்து, ஜனாதிபதிக்கு  கலாநிதி தீபிகா உடகம அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில், அநியாயமான விமர்சனங்களால் மனச்சோர்வு அடைந்திருப்பதாக அதில் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top