இந்தியாவுக்குச் சென்றுள்ள மஹிந்த
இரண்டு
நாட்கள் பயணம்
ஒன்றை மேற்கொண்டு,
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த
ராஜபக்ஸ இந்தியாவுக்குப்
பயணமாகியுள்ளார்.
தி
ஹிந்து குழுமத்தினால்,
பெங்களூரு நகரில்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ள
கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றவே அவர் அங்கு சென்றுள்ளார்.
இன்று
ஆரம்பமாகி நாளை
வரை நடைபெறவுள்ள
இந்தக் கருத்தரங்கில்,
மஹிந்த ராஜபக்ஸ,
இந்திய- இலங்கை
உறவுகளின் எதிர்காலம்
என்ற தலைப்பில்
இன்று உரையாற்றவுள்ளார்.
மஹிந்த
ராஜபக்ஸவுடன், நாமல் ராஜபக்ஸ, லொகான் ரத்வத்த,
டிலான் பெரேரா,
பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட
பலரும் பெங்களூரு
சென்றுள்ளனர்.
0 comments:
Post a Comment