வூதிஅரேபியா 12 நாடுகளுக்கு செல்வதை
 தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளது
இலங்கையும் இதில் இடம்பெற்றுள்ளது



அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுலாப்பயணம் மற்றும் மேலும் 12 நாடுகளுக்கு செல்வதை வூதிஅரேபியா தற்காலிகமான இடைநிறுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. கொரோனா வைரஸே இதற்கு காரணமாகும். இதேவேளை இந்திய அரசாங்கம் சுற்றுலாப்பயணிகள் விசா ஊடாக தமது நாட்டுக்கு வருவதை நாளை முதல் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரையில் தற்காலிகமாக தடை செய்துள்ளது. இது தொடர்பில் பல வரையறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இருப்பினும் இராஜதந்திர மட்டத்திலான விசா மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு விசா வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இதேவேளை ஐரோப்பிய விஜயத்துக்கு அமெரிக்க தடை விதித்துள்ளது. இது 30 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ரம் தெரிவித்துள்ளார். இருப்பினும் பிரிட்டனுக்கு இந்த விதிமுறை ஏற்புடையதாகாது. இந்த சட்டம் வெள்ளிக்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இதேவேளை ஐரோப்பிய நாடுகளில் ஆக கூடுதலான கொரோனா வைரஸ் தாக்கம் இத்தாலியிலேயே இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் சுமார் 200 ற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அமைவாக அந் நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 830 ஆக அதிகரித்துள்ளது.

விற்பனை நிலையங்கள் அங்கு மூடப்பட்டுள்ளன. ஈரானில் 354 பேர் உயிரிழந்துள்ளனர்.  அமெரிக்க தமது நாடு மீது விதித்துள்ள தடையின் காரணமாக அத்தியாவசிய மருந்து வகைகளை கூட இறக்குமதி செய்ய முடியாது உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

கட்டார் நாட்டில் நோய் தாக்கத்துக்கு உள்ளானோர் எண்ணிக்கை 24 ஆகும். தற்பொழுது உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,400 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் 35 ற்கு மேற்பட்ட மாநிலங்களில் கொரோனா பரவியுள்ளது. 23 மாநிலங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் எந்தவொரு கொரோனா மரணமும் இடம்பெறவில்லை. உலகம் முழுவதிலும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 125,000 ஆக அதிகரித்துள்ளது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top