தேர்தல் ஆணைக்குழு
வெளியிட்டுள்ள விசேட அறிக்கை
நாளை 16 ஆம் திகதி அரசாங்க விடுமுறை தினம் என்பதால் பாராளுமன்ற பொது தேர்தலுக்கான கட்டுப்பணம் பொறுப்பேற்றல் மற்றும் வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் பணிகள் நாளைய தினம் (16) இடம்பெறாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேர்தல் ஆணைக்குழு இதனை குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்னர் அறிவித்தபடி மார்ச் மாதம் 17, 18 ஆகிய இரண்டு தினங்களில் அலுவலக நேரங்களிலும் மார்ச் 19 ஆம் திகதி காலை 8.30 தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரையில் கட்டுப்பணத்தை செலுத்த முடியும். இதனுடன் வேட்பு மனுக்களையும் கையளிக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 19 ஆம் திகதி வேட்பு மனு மற்றும் எதிர்ப்பு தொடர்பான நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் 1981 இலக்கம் 1 இன் கீழான பாராளுமன்ற பொது தேர்தல் சட்டத்தின் 24 (1) சரத்தின் கீழ் தேர்தல் ஆணைக்குழுவினால் தேர்தல் வாக்களிப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.
மார்ச் 16 ஆம் திகதி அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளமையால் தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பம் மார்ச் மாதம் 17 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரையில் ஏற்றுக்கொள்வதற்கு அனைத்து தெரிவு அத்தாட்சி அதிகாரிகளுக்கும் பிரதி / துணை தேர்தல் ஆணையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.