கொரோனாவிடம் இருந்து காப்பாற்றுமா?
மாட்டு மூத்திரம் (சிறுநீர்)!
சீனாவின் வுகான் மாகாணத்தில் தோன்றி, மூன்றே மாதங்களில் உலகின் மிகக்கொடிய உயிர்க்கொல்லி நோயாக உருவெடுத்துள்ள கொரோனா வைரஸ் தாக்கம் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளை திக்குமுக்காட வைத்துள்ளது.
இந்த நோய்த்தொற்றினால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கவுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றில் இருந்து தப்பிக்க பசு மாட்டின் சிறுநீர் மிகச்சிறந்த கிருமிநாசினி என்ற நம்பிக்கை தற்போது இந்தியாவில்... குறிப்பாக, இந்து மக்களிடையே அதிகரித்து வருகின்றது.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பசுவின் சிறுநீர் மற்றும் சானத்தின் மூலம் தீர்வு காண முடியும் என அசாம் சட்டசபையில் சுமன் ஹர்ப்ரியா என்ற எம்.எல்.ஏ. சுட்டிக் காட்டி இருந்தார்.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் பசு மாட்டின் சிறுநீர் மற்றும் சானத்தை பதப்படுத்தி விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்படவுள்ளதாக அம்மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் சமீபத்தில் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லியில் அகில பாரத இந்து மகாசபா இயக்கத்தின் சார்பில் பசுவின் சிறுநீரைப் பருகும் நிகழ்ச்சி ஒன்று நேற்று நடத்தப்பட்டது.
இந்த இயக்கத்தின் தலைவரான சக்ரபாணி மஹராஜ் என்பவர் சிறுநீர் அருந்தும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
0 comments:
Post a Comment