இடம்பெயர்ந்து வந்தோர் மீது
கிருமி நாசினி தெளிப்பு;
இந்தியாவில் சர்ச்சை
இந்தியாவில் வெளிமாநிலங்களில் இருந்து, உத்தர பிரதேசத்துக்கு, சிறப்பு
பஸ்களில் வந்தவர்கள் மீது, கிருமி நாசினி,
பீய்ச்சி அடிக்கப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டில்லி
உட்பட வெளி மாநிலங்களில் வேலை
பார்த்து வந்த, உத்தர பிரதேசத்தைச்
சேர்ந்தவர்கள், சிறப்பு பஸ்கள் மூலம்
அழைத்து வரப்பட்டனர். பரேலி மாவட்ட எல்லையில்,
அவர்கள் குழுவாக உட்கார வைக்கப்பட்டு,
அவர்கள் மீது கிருமி நாசினி,
பீய்ச்சி அடிக்கப்பட்டது. இது தொடர்பான, 'வீடியோ'
சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து, சர்ச்சை ஏற்பட்டது.
முன்னாள்
மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜிதின்
பிரசாதா கூறுகையில்,
''நாட்டில்
என்ன நடக்கிறது. இந்த மக்களை, இப்படியா
துன்புறுத்த வேண்டும். ''அவர்கள் மீது, வேதிப்பொருள்
கலந்த தண்ணீரை பீய்ச்சியடிக்க, உ.பி., அரசு எப்படி
உத்தரவிட்டது? ஏற்கனவே, இந்த மக்களின் எதிர்காலம்
கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், அதிகாரிகளும் இப்படி நடந்து கொள்வது,
எந்த வகையில் நியாயம். இது,
நிச்சயம் கண்டனத்திற்குரியது,'' என, தெரிவித்துள்ளார்.
'குளோரின்
கலந்த தண்ணீர் தான் பீய்ச்சி
அடிக்கப்பட்டது. அதில், ரசாயனம் ஏதும்
சேர்க்கப்படவில்லை. கண்களை மூடிக் கொள்ளும்படி
அனைவரிடம் கூறினோம். அவர்களை பாதுகாக்கவே இந்த
நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், மனித உரிமை
மீறல் ஏதுமில்லை' என, உத்தர பிரதேச
அதிகாரிகள் கூறியுள்ளனராம்.
0 comments:
Post a Comment