கொரோனா வைரஸ்
தொற்றுக்கு உள்ளானவர்களின்
எண்ணிக்கை 22 ஆக அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் அடையாளம்
காணப்பட்டுள்ளனர்.
13 வயது சிறுமி மற்றும் மூன்று ஆண்கள் உள்ளிட்ட நான்கு இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த மூன்று ஆண்களும் 50, 73 மற்றும் 37 வயதுடையவர்கள் எனவும், கொழும்பு மருத்துவ பரிசோதனை நிலையத்தின்
பரிசோதனை முடிவுகளுக்கமைய இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய 22பேர் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றியதாக
இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
11.03.2020
1. இத்தாலி சுற்றுலா பயணிகளின் சுற்றுலா வழிகாட்டி: 52
வயதான ஆண்
(இது தவிர கடந்த 27.01.2020 அன்று அடையாளம் காணப்பட்ட சீன
பெண் ஒருவர்)
12.03.2020
2. சுற்றுலா வழிகாட்டியுடன் தங்கியிருந்தவர் : 44 வயது ஆண்
13.03.2020
3. ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பியவர் : 41 வயது ஆண்
4. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 37 வயது ஆண்
5. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 43 வயது ஆண்
14.03.2020
6. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 44 வயது ஆண்
7. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 43 வயது ஆண்
8. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 42 வயது ஆண்
9. இத்தாலியிலிருந்து வந்த பெண்; 56 வயதான பெண்
10. கொரோனா தொற்றுக்குள்ளானவரின் உறவினர்: 17 வயது சிறுமி
15.03.2020
11. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட ஜேர்மனி பயணத்தில் இணைந்து
பயணித்தவர்: 45 வயது ஆண்
12. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
13. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
14. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
15. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
16. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
17. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
18. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
16.03.2020
19. 13 வயது சிறுமி
20. 50 வயது ஆண்
21. 37 வயது ஆண்
22. 73 வ்யது ஆண்
0 comments:
Post a Comment