தென்னாபிரிக்காவில்
சிகரெட் விற்பனைக்கு தடை



தென்னாபிரிக்காவில் சிகரெட் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

புகைத்தலுக்கும், கொரோனா-மரணங்களுக்கும் தொடர்பு இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன் அடிப்படையில், சிகரெட் விற்பனைத் தடை செய்யப்படுகிறதென தென்னாபிரிக்க பத்திரிகையொன்று அறிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து தென்னாபிரிக்காவில் மதுபான விற்பனையும் தடை செய்யப்படும். அந்நாட்டில் 927 பேருக்கு கொரோனா-வைரஸ் தொற்றியுள்ளது.

இதேவேளை வரலாற்றிலேயே ஆகக்கூடுதலான பொருளாதார மீட்சித் திட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் அங்கீகாரம் அளித்துள்ளார். பொருளாதாரத்தை முடக்க நிலையில் இருந்து மீட்பதற்காக இரண்டு ட்ரில்லியன் டொலரை ஒதுக்கும் பிரேரணையில் ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று கைச்சாத்திட்டிருக்கிறார்.

கொரோனா-வைரஸ் தீவிரமாக பரவியுள்ளதால், அமெரிக்காவில் 33 இலட்சம் பேர் வேலைவாய்ப்புக்களை இழந்துள்ளனர். இவர்களுக்கு உதவி செய்வதும் பொருளாதார மீட்புத் திட்டத்தின் நோக்கமாகும்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top