கொரோனா பரவுவதை
தடுப்பதற்கு ஒத்துழைக்குமாறு
அரசு வேண்டுகோள்
கொரோனா
வைரஸ் எனும்
கொவிட் – 19 இலங்கையில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அதனை தடுப்பதற்காக
ஆரம்பித்துள்ள நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அரசு
மக்களிடம் வேண்டுகோள்விடுத்துள்ளது.
இதுவரை
உலகம் முழுவதும்
பல நாடுகளில்
வைரஸ் பரவியுள்ளது. அதனை தடுப்பதற்கு அந்நாடுகள் பல
நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.
இந்நாட்டில்
கொரோனா வைரஸ்
தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் நேற்று முன் தினம் (10) பிற்பகல்
அடையாளம் காணப்பட்டதாக
சுகாதார சேவை
பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்ஹ குறிப்பிட்டுள்ளார்.
52 வயதையுடைய அவர் சுற்றுலா வழிகாட்டியாக செயற்பட்டுள்ளார். இத்தாலி நாட்டு சுற்றுலாக்குழுவுடன்
அவர் வழியாட்டியாக இணைந்து செயற்பட்டுள்ளதுடன் தற்போது நோயாளி நோய்த்தடுப்பு நடவடிக்கைக்கு
உற்படுத்தப்பட்டிருக்கிறார். அவருக்கு அவசியமான சிகிச்சைகளை ஆரம்பித்துள்ளதாகவும் வைத்தியர்
அனில் ஜாசிங்ஹ மேலும் குறிப்பிட்டார்.
சுற்றுலாக்குழு
பயணித்த இடங்கள்
மற்றும் சந்தித்த
நபர்கள் பற்றிய
தகவல்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில்
கொரோனா வைரஸ்
பரவுவதை தடுப்பதற்கு
அரசு முறையான
திட்டத்துடன் கூடிய பரந்துபட்ட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. அதற்காக நேற்று முன் தினம் (10) முதல் தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் உள்ளிட்ட
நாடுகளில் இருந்து வருகை தருபவர்களை நோய்தடுப்பு செயற்பாட்டுக்கு உற்படுத்தும் நடவடிக்கை
ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டில் இருந்து வருகை தருபவர்கள் மற்றும் பொதுமக்கள்
முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு முழுமையான
ஒத்துழைப்பை வழங்குமாறு அரசு வேண்டுகோள்விடுத்துள்ளது.
0 comments:
Post a Comment