இன்று விடுமுறை தினம்
- அத்தியாவசிய சேவைகள்
வழமை போன்று இடம்பெறும்



இன்று விடுமுறை தினமாக இருந்த போதிலும் அத்தியாவசிய சேவைகளான மின்சாரம், நீர் விநியோகம் உள்ளிட்ட பொது மக்களுக்கான சேவைகள் இடம்பெறும் என்று அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பணிகளுக்காக மாத்திரம் அரச அலுவலகங்களுக்கு வருமாறு அமைச்சர் பொது மக்களிடம் கேட்டுள்ளார். தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கலந்துரையாடி தேவையாயின் மாத்திரம் வரமுடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச மற்றும் வங்கி விடுமுறை தினமாக இன்று அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்தும் நீடிக்கவேண்டிய தேவை எற்பட்டால் மாத்திரமே நீடிக்கப்பபடும் என்று அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு விசேட சுற்றறிக்கை அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெரும் எண்ணிக்கையில் பொது மக்கள் கூடும் நிகழ்வுகள், பயிற்சி கூட்டங்கள் முதலானவற்றை தற்காலிகமாக இடை நிறுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

அரசாங்க அலுவலகங்களில் அத்தியாவசிய பணியாளர் சபை அதிகாரிகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய அதிகாரிகளை மாத்தரம் அழைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவுமாயின் மாத்திரம் அரச அலுவலகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top