2020.03.25ஆம் திகதி நடைபெற்ற
அமைச்சரவைத் தீர்மானங்கள
2020.03.25ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக்
கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் நிகழ்வு
நேற்று
(26) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.
இந்த
நிகழ்வில் அமைச்சரவை
பேச்சாளர்களான உயர்கல்வி தொழில் நுட்பம் புத்தாக்கம்
மற்றும் தகவல்
மற்றும் வெகுஜன
ஊடகத்துறை அமைச்சர்
காலநிதி பந்துல
குணரத்ன அவர்களும்
பெருந்தோட்டத் தொழிற்துறை ஏற்றமதி உற்பத்தி அமைச்சர்
அவர்கள் ரமேஷ்
பத்திரன அவர்களும்
கலந்து கொண்டனர்.
இதன் போது
தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் சாராம்சம் பின்வருமாறு:
• கொரோனா
வைரசின் காரணமாக
நேரடியாக தாக்கத்துள்ளான
பல்வேறு தரப்பினருக்கு
நிவாரணம் வழங்குவதற்காக
ஜனாதிபதி கோட்டபாய
ராஜபக்ஸஅவர்களினால்
சமீபத்தில்; அமைச்சரவைக் கூட்டத்தின் போது சமர்ப்பிக்கப்பட்ட
ஆவணத்திற்கு அமைவாக இலங்கை மத்திய வங்கியின்
ஆளுநரினால் வணிக வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சுற்றுநிருபம்
அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
• முச்சக்கரவண்டி
, பாடசாலை வேன்,
லொறி, உணவு
பொருட்கள் ஏற்றிச்
செல்ல்பயன்படுத்தப்படும் சிறிய அளவிலான
வாகனங்கள், பஸ், வேன் போன்ற வாகனங்கள்
போன்றவை குத்தகை
முறையின் கீழ்
பெறப்பட்ட அனைத்து
வாகனங்களுக்கான லீசிங் தவணைக் கட்டணம் மற்றும்
வட்டி ஆகியன
செலுத்தப்படுவது 6 மாத காலங்களுக்கு
இடைநிறுத்தப்பட்டுள்ளது.
• அரசாங்கம்
மற்றும் தனியார்
துறை சபை
அல்லாத ஊழியர்களதும்
சம்பளத்தில் கடன் தவணைப் பணத்தை அறவிடுவது
மே மாதம்
30ஆம் திகதி
வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
• வங்கி
மற்றும் நிதி
நிறவனங்களினால் பத்து இலட்சத்திற்கும் குறைந்த தனிப்பட்ட
கடனைப் பெற்றுக்கொண்ட
நபர்களிடமிருந்து கடனை அறவிடுவது 3 மாத காலத்திற்கு
இடைநிறுத்தப்பட்டுள்ளது.
• மின்சாரக்
கட்டணம் மதிப்பீட்டு
வரி, வங்கி
காசோலைக்கான செல்லுபடியாக காலம் மே மாதம்
30ஆம் திகதி
வரை நீடிக்கப்பட்டுள்ளது.
• மாதாந்த
கடன் அட்டை
50 ஆயிரம் ரூபா
வரையிலான பரிவர்த்தனைகளுக்கான
கடன் வட்டி
வீதம் 15 சதவீதமாக
குறைக்கப்பட்டுள்ளதுடன் ஆகக் கூடிய
வரி அறவீடு
50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
• கொரோனா
வைரசு தொற்றை
ஒழிப்பதில் ஈடுபட்டுள்ள சுகாதார, பொலிஸ் , சிவில்
பாதுகாப்பு உறுப்பினர் அடங்கலாக அரச ஊழியர்களுக்கான
அக்ராஹார காப்புறுதி
பயன் இரண்டு
மடங்காக அதிகரிக்கப்படுகிறது..
• சமுர்த்தி
மற்றும் வறுமை
குடும்பங்களுக்கு உணவுப் பொருளுக்கான அட்டை வழங்கும்
வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
• பிரதேச
செயலாளர் மற்றும்
பொலிஸ் கண்காணிப்பின்
கீழ் மீனவர்களுக்கு
கடலுக்கு செல்வதற்கு
சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதுடன் பிடிக்கப்படும்
மீன்களை அரசாங்கத்தினால்
கொள்வனவு செய்வதற்கு
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
• கைத்தொழில்
துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு
ஊழியர் சேமலாப
நிதியை செலுத்தல்,
மின் கட்டணம்
மற்றும் மதிப்பீட்ட
வரியை செலுத்துவதற்காக
தொழிற்பாட்டு மூலதனம் தேவையின் அடிப்படையில் 4 சதவீத
கடனைப் பெற்றுக்
கொள்வதற்காக வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன்
வங்கி மூலம்
அறவிடப்படும் எஞ்சிய வட்டி அரசாங்கத்தினால் அந்த
வங்கிக்கு செலுத்தப்படும்..
0 comments:
Post a Comment