ஊரடங்கு சட்டத்தை மீறிய
5 ஆயிரத்து 185பேர் கைது
ஊரடங்கு சட்டத்தை மீறிய5 ஆயிரத்து 185பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
.
கடந்த 20ஆம் திகதி மாலை 6 மணியிலிருந்து நேற்று மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 5 ஆயிரத்து 185 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஆயிரத்து 125 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று நண்பகல் 12 மணி முதல் நேற்று மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 342 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீடுகளிலிருந்து வெளியேறி பொது இடங்களில், பிரதான வீதிகளில், மற்றும் குறுக்கு வீதிகளில் நடமாடுவோருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறும் பொலிஸ் மா அதிபர் சகல பொலிஸ்; நிலைய அதிகாரிகளையும் நேற்று அறிவுறுத்தியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.