இலவச உர விநியோகம்
நாளை மறுதினம்
அம்பாறையில் ஆரம்பம்
உரத்தை
இலவசமாக வழங்கும்
வேலைத்திட்டம் அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பமாகவுள்ளது.
உற்பத்தி
நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் முறைக்கு அமைவாக
இந்த வேலைத்திட்டம்
ஏனைய மாவட்டங்களில்
முன்னெடுக்கப்படும் என்று உர
செயலகத்தின் பணிப்பாளர் மகேஸ் கம்மன்பில தெரிவித்துள்ளார்.
சிறுபோக
உற்பத்தி நடவடிக்கைகள்
அம்பாறை மாவட்டத்தில்
ஆரம்பமாகின்றன. இயற்கை உரத்தை பயன்படுத்தி சிறுபோகத்தில்
30 ஆயிரம் ஹெக்டர்
நிலப்பரப்பில் நெல் உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக
அரசாங்கம் 25 கோடி ரூபாவை வழங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார். ஏதிர்வரும் 10 வருட
காலப்பகுதிக்கு நெல் உற்பத்தியில் முழுமையாக இயற்கை
உரத்தை பயன்படுத்தி
மேற்கொள்ளவதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இலக்காகும். இதற்கான
கொள்கைகளை வகுப்பதற்கு
விசேட நிபுனர்களைக்கொண்ட
குழு ஒன்று
நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment