மரத்தை
வளர்ப்பதற்கு கட்சியா?
இல்லை சமூகப் பிரச்சினைகளுக்கு
கட்சியா?
மரத்தைக்காட்டி ஏன்
மரத்தை வளர்ப்பதற்கு கட்சியா? இல்லை சமூகப் பிரச்சினைகளுக்கு கட்சியா உங்களின் “
ஆயிரம் விழுதுகளுடன் நமது மரம் வாழும்” என்ற இந்தக் கோஷத்தைப் பார்க்கின்றபோது சமூகப் பிரச்சினைகளுக்கு அல்லாமல்
மரத்தை வளர்ப்பதற்கு கட்சியை முன்னெடுத்துச்செல்கிறீர்கள் போல் தெரிகின்றது.
ஆயிரம்
விழுதுகளுடன் மரம் வாழ்ந்தால் மாத்திரம்
முஸ்லிம் சமூகத்திற்கான எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறிவிடுமா கட்சி தலைவா?
மரம்
கட்சிக்கு வழங்கப்பட்ட தேர்தல் சின்னம்.
வேறு
கட்சியிலுள்ளவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட கட்சி சின்னங்களை வைத்து
உங்களைப் போன்று இவ்வாறு வீரியமாக
கைகளை உயர்த்தி கட்சி சின்னத்தைக் காட்டி ஆர்ப்பரிப்பு
செய்கின்றனரா? இல்லையே.
மரத்தை வளர்த்தால்
நிழல் கிடைக்கும் மழையும் பெய்யும் வீடுகளுக்கு
தேவையான பலகைகளைப் பெறலாம் என்றுதான் நாம் அறிந்து வைத்துள்ளோம். ஆயிரம் விழுதுகளுடன் மரம்
வாழ்ந்தால் முஸ்லிம் சமூகத்திற்கான எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறிவிடுமா? சமூகம் எதிர்பார்க்கும்
எல்லாத் தீர்வுகளும் கிடைத்துவிடுமா?
உங்களின்
20 வருடங்களுக்கு மேலான தொடர்ச்சியான அமைச்சராகப் பதவி
வகித்த அதிகார காலத்தில் சமூகத்திற்கு
பிரதேசங்களுக்கு செய்த சேவைகளை முன்வைத்து இப்படி
வீரியத்துடன் கைகளை உயர்த்தி ஆர்ப்பரிப்பு செய்தால் அதனை வரவேற்கலாம்.
அதைவிடுத்து
ஏன் மரத்தை வைத்து ஆயிரம் விழுதுகளுடன் மரம் வாழ்ந்தால் என்ற கோஷத்திற்கு இந்த ஆர்ப்பரிப்பு செய்ய வேண்டும்?
கிழக்கில்
உள்ள முஸ்லிம்கள் மர்ஹும் அஷ்ரப்
அவர்கள் மரணித்ததன் பின்னர் அன்றிருந்த நிலையில்தான் இப்போதும் இருந்து
கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சிந்திக்க தெரியாதவர்கள், மடையர்கள் கட்சியையும், மரத்தையும் எடுத்து வைத்து
பேசினால் இவர்களை மடக்கி ஏமாற்றிவிடலாம் என்று நினைத்தா இந்த இந்த
கோஷத்துடன் இப்படியான ஆர்ப்பரிப்பு?
15-20 வருடங்களுக்கு முன்
கிழக்கு மக்களை இப்படி மரத்தை
கூறி ஏமாற்றியது போன்று 2020 ஆம் ஆண்டில் தற்போதைய
இளைஞர்களை மரம், முஸ்லிம் கட்சி என்று ஆர்ப்பரித்து
ஏமாற்றவே முடியாது.
கட்சி, மரம் என்று கூறி தொடர்ந்து
அதிகாரத்தில் இருந்த சிலரின் தாளங்களை
தற்போதய இளைஞர்கள் சரியாக புரிந்து வைத்துள்ளனர், கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களும் தற்போது
சரியாக விளங்கிவிட்டார்கள்
கட்சி தலைவா!
0 comments:
Post a Comment