கொரோனா வைரஸ் தாக்குதல்
21 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 196 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை 4 லட்சத்து 61 ஆயிரத்து 9 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 20 ஆயிரத்து 846 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 3 லட்சத்து 26 ஆயிரத்து 364 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 799 பேர் சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர்.

கொரோனாவால் அதிக அளவில் உயிரிழப்பை சந்தித்த நாடுகள் வருமாறு:-

சீனா - 3,281
இத்தாலி - 7,503
அமெரிக்கா - 889
ஸ்பெயின் - 3,445
ஜெர்மனி - 206
ஈரான் - 2,077
பிரான்ஸ் - 1,331
சுவிஸ்சர்லாந்து  - 153
தென்கொரியா - 126
இங்கிலாந்து - 435
நெதர்லாந்து - 356
பெல்ஜியம் - 178
ஜப்பான் - 45
பிரேசில் - 50
கிரீஸ் - 22
இந்தோனேசியா - 58
பிலிப்பைன்ஸ்     - 38
ஈராக் - 29
ஸ்வீடன் - 44
பொர்ச்சீகல் - 43
ஆஸ்திரியா - 30
கனடா - 30
டென்மார்க் - 34
துருக்கி - 44
ஈக்வடார் - 28
எகிப்து - 21





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top