தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின்
பதின்மூன்றாவது வருடாந்த பட்டமளிப்பு
மார்ச் 16 ஆம், 17 ஆம் திகதிகளில்



இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக்கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் மார்ச் 16 ஆம், 17 ஆம் திகதிகளில் ஒலுவில் வளாக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

மார்ச் 16 ஆம் திகதி காலை அமர்வில் பிரயோக விஞ்ஞானங்கள் மற்றும் கலை கலாசார பீட பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெறும். இவ்வமர்வில் பிரதான உரையினை ஆற்றுவதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கௌரவ .எச்.எம். திலீப் நவாஸ் அழைக்கப்பட்டுள்ளார்.

அன்றைய தினம் பிற்பகல் பொறியியல் பீடம், இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீட பட்டதாரிகளுக்கும் பட்டமளிக்கப்படவுள்ளது. இவ்வமர்வில் றுகுனு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் விவசாய ஆய்வுக் கொள்கைக்கான இலங்கைக் கவுன்சிலின் பிரதானியுமான சிரேஷ்ட பேராசிரியர் காமினி சேனாநாயக்க பிரதான உரையினை நிகழ்த்தவுள்ளார்.

இரண்டாம் நாள் அமர்வாக மார்ச் 17 ஆம் திகதி, முகாமைத்துவ வர்த்தக பீடத்திற்கான பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெறும். இவ்வமர்வில் களனிப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் தலைமைப் பேராசிரியரும் மனிதப்பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானங்களுக்கான உயர் கற்கைகள் தேசிய நிலையத்தின்  பணிப்பாளருமான சிரேஷ்ட பேராசிரியர் லால் மேர்வின் தர்மசிறி பிரதான உரையினை ஆற்றவுள்ளார். அன்றைய தினம் பிற்பகல் 12.30 மணியுடன் இந்நிகழ்வு உத்தியோகபூர்வமாக முடிவடையவுள்ளது.

இந்நிகழ்வில் மேற்படி ஐந்து பீடங்களினதும் 988 உள்வாரிப் பட்டதாரிகள் பட்டங்களைப் பெறவுள்ளதுடன் 22 பேர் வியாபார நிர்வாக முதுமாணிப் பட்டத்தினையும் 03 பேர் முதுகலைமாணி பட்டத்தினையும் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் எம்.. கரீம் மற்றும் அதே பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. எம்..எம். அமீன் ஆகியோர் கௌரவ கலாநிதிப் பட்டங்களைப் பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இவ் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 16ம், 17ம் ஆகிய இரு தினங்களாக பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மண்டபத்தில் இடம்பெறவுள்ளதுடன் இதில் மூன்று கடடங்களாக இடம்பெறவுள்ளதுடன் 1013 பேர் பட்டம் பெறவுள்ளனர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top