கொரோனா வைரஸை அமெரிக்கா
 உருவாக்கி இருக்கலாம்
 - ஈரான் குற்றச்சாட்டு



கொரோனா வைரஸால் உலகமே கதிகலங்கி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,643 ஆக உயர்ந்து உள்ளது.

192 நாடுகளுக்கு பரவிய நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,36,075 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97,636 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 400- நெருங்குகிறது.

இத்தாலியைப் போல ஈரானிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஈரானில் ஒரே நாளில் 129 பேர் பலியாகி உள்ளனர். அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை மொத்தம் 1685 ஆக அதிகரித்துள்ளது. 20,610 பேர் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர்.

இது குறித்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அரசு தொலைக்காட்சியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நீண்டகால எதிரிகளிடையே பதட்டங்கள் அதிகரித்த போதிலும் அமெரிக்கா தங்களுக்கு உதவி செய்ய முன்வந்ததாகவும் அதனை நான் நிராகரித்துவிட்டேன்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உதவுவதாக அமெரிக்கா பலமுறை முன்வந்தது. அவர்கள்தான் அந்த வைரஸை உருவாக்கியதாக ஒரு குற்றசாட்டு உள்ளது. அது உண்மையா என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் நீங்கள் எங்களுக்கு உதவ முன்வருவது விந்தையாக இருக்கிறது.

உதவி செய்வதாக கூறி, ஈரானில் வைரஸ் நிரந்தரமாக இருக்க உதவும் ஒரு மருந்தை எங்களுக்கு வழங்கினால் என்ன செய்வது? என கேள்வி எழுப்பினர். மேலும், அமெரிக்க தலைவர்கள் தங்களுக்கு எல்லாம் தெரிந்தது போல நடிப்பவர்கள் என கூறி உள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top