நாளை விடுமுறை தினம் அல்ல
–
அரச நிர்வாக அமைச்சின் செயலாளர்
அரசாங்க திணைக்களங்களில் பணியாளர்கள் அல்லாத ஊழியர்களை
தேவைக்காக மாத்திரம் சேவைக்கு அழைப்பதற்கு திணைக்களம் மற்றும் ஏனைய நிறுவனங்களின்
தலைமை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இருப்பினும் நாளை அரசாங்க வங்கி அல்லது வர்த்தக விடுமுறை
தினம் அல்ல என்று அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஸ்ரீபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று
நடைபெற்ற COVID 19 செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயத்தை
செயலாளர் குறிப்பிட்டார்.
இருப்பினும் நிறுவனங்களுக்கு கடமைகளுக்கு வருகை தருவோரில்
தேவைக்கு மாத்திரம் வரையறுப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும்
அவர் தெரிவித்துள்ளார்.
இதே வேளை வெளிநாட்டு விஜயங்களில் ஈடுபட்டு நாடு திரும்பும்
அரச ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சந்தேகம் இருக்குமாயின் அவர்களுக்கு
சம்பளத்துடன் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் உள்வாங்குவதற்கு அனுமதி
வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக, கொரோனா ஒழிப்பு செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.இந்த
செயலணியின் ஆலோசனைக்கு அமைவாகவே இன்றைய தினத்தை பொது விடுமுறை தினமாக
அறிவிப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அரச நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர்
மேலும் தெரிவிக்கையில் புத்தாண்டு பண்டிகை காலம், பொது தேர்தல்
ஆகியவற்றை கருத்திற் கொண்டு இந்த வாரம் வெள்ளிக்கிழமை பொது விடுமுறை தினம்
தொடர்பில் செயலணி மேலும் தீர்மானங்களை மேற்கொள்ளும்.
இதன் போது இன்றைய விடுமுறை கீழ் கொரோனா வைரஸை தடுப்பதற்கான
உத்தேச நடவடிக்கையிலான பயன்களை மதிப்பீடு செய்து தொடர்ந்தும் பொது விடுமுறை
குறித்து தீர்மனம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். தேவையை
முன்னிலைப்படுத்தி அலுவலகங்களுக்கு பொது மக்கள் வர வேண்டும். தேவையில்லாமல்
அலுவலகங்களுக்கு வருவதை தவிர்த்துக் கொள்வது அரசாங்கத்தின் கொரோனா தடுப்பு
வேலைத்திட்டத்திற்கு பெரிதும் உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தை தவிர்ப்பதற்காக புதிய
செயற்றிட்டங்களை உள்ளடக்கிய சுற்று நிருபத்தை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு
வெளியிட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸை இலங்கையில் இருந்து ஒழித்தல் என்னும்
தொனிப்பொருளின் கீழ் ஐந்து காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. கொரோனா தொற்றை
பரவாது தவிர்ப்பது சகல அரச, அரசசார்பு, தனியார்
நிறுவனங்களினதும், பொதுமக்களினதும் பொறுப்பென அதில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு சகல மாகாண
செயலாளர்களுக்கும், மாவட்ட செயலாளர்களுக்கும், பிரதேச செயலாளர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment