முன்னாள்
அமைச்சர் ரிஷாட் பதியுதீனால்
பொத்துவிலில்
அமைக்கப்பட்ட மாதிரி கிராமம்!
மாவட்டத்தின்
சாரதிகளும் நாங்களே,
நடத்துனர்களும்
நாங்களே.
வீராப்பு
பேசியவர்கள்
இப்படி
எதனைச் செய்தார்கள்?
மக்கள்
கேள்வி
பொத்துவிலில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களால்
ஏழை மக்களுக்கு வழங்கப்பட 50 வீடுகள், பாடசாலை, பள்ளிவாசல், மைதானம் போன்றவைகள் அடங்கிய மாதிரி கிராமமே இது.
இவ்வாறான சேவைகள் இந்த மாவட்டத்தில் இரண்டு தசாப்தத்திற்குள்
நடைபெற்று உள்ளதா? என விடயங்களை அறிந்தவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
நுரைச்சோலையில் பேரியல் அஷ்ரப் அவர்களால் கட்டிக்கொடுத்த 500 வீட்டுத்திட்ட மாதிரி கிராமத்தை இப்பிரதேச
மக்களின் வாக்குகளைப் பெற்று அமைச்சராகவும், பிரதி அமைச்சராகவும், இராஜாங்க
அமைச்சராகவும் அதிகாரத்திற்கு வந்தவர்களால் உரியவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு
முடியாமல் போய்விட்டது.
அம்பாறை மாவட்டத்தின் சாரதிகளும் நாங்களே, நடத்துனர்களும்
நாங்களே என்று நல்லாட்சி என்று கூறப்பட்ட அந்த ஆட்சியின் ஆரம்ப காலகட்டத்தில் வீராப்பு
பேசினார்கள்.
ஆனால், வீராப்பு பேசியவர்களால் சுட்டிக்காட்டக்
காட்டக்கூடிய எந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் செய்யப்படவில்லை என மக்களால் தெரிவிக்கப்படுகின்றது.
பொத்துவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருப்பது போன்று சாய்ந்தமருதிலும்
வீடுகள் கட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களால் காணி கேட்கப்பட்ட்தாகவும் அது
சில தடுப்பாளர்களால் தடுக்கப்பட்டு மறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுபோன்று சம்மந்துறையிலும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களால் கொண்டுவரப்பட்ட
ஒரு பாரிய திட்டம் அங்கிருந்தவர்களால் தடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment