பட்டதாரிகளுக்கான நியமன
பெயர்ப் பட்டியல் வெளியீடு
தொழில்
வாய்ப்பு அற்ற
பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தகுதி பெற்றவர்களின் பெயர்ப்பட்டியல்
அரச நிர்வாக
இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நியமனக்கடிதம்
கிடைக்கப்பெற்று 3 நாட்களுக்குள் இவர்கள்
தமது பிரதேச
செயலாளர் பிரிவிற்கு
சமூகமளிக்க வேண்டும் என்று நியமனக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டடிருந்த போதிலும்
நியமனக்கடிதம் கிடைக்கப்பெறாதோர் இது தொடர்பில் எந்தவித
சந்தேகத்தையும் ஏற்படுத்திக்கொள்ளத்தேவையில்லை.
கடிதம்
கிடைக்கப்பெற்ற 7 நாட்களுக்கு பயிற்சிக்கு சமூகமளிக்க வேண்டும்
என்று குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும்
இது தற்பொழுது
நடைமுறையில் இல்லை. தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு
அமைய பொது
தேர்தல் நிறைவடைந்து
5 நாட்களுக்கு பின்னர் பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம்
ஆரம்பிக்கப்படவுள்ளது.
0 comments:
Post a Comment