ரத்தன, ஞானசார தேரர்களின்
வேட்புமனுக்கள் நிராகரிப்பு
சத்தியக்கடதாசியில் காணப்பட்ட
குழறுபடியே இதற்கு காரணம்
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் ஞானசார தேரர் மற்றும் அத்துரலிய ரத்தன தேரர் உள்ளிட்டோரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருணாகல் மாவட்ட தேர்தல் அத்தாட்சி அலுவலர் ஆர்.எம். ரத்நாயக்கவினால், ஞானசார தேரரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்சியில் கொழும்பு, குருணாகல், மொணராகலை ஆகிய மாவட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
'அபே ஜன பல பக்ஷய' (எமது மக்கள் கட்சி) எனும் பெயரில் இரட்டை கொடி சின்னத்தில் குறித்த கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் சமர்ப்பித்த சத்தியக்கடதாசியில் காணப்பட்ட குழறுபடியே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நேற்றைய வேட்புமனுத் தாக்கல் நிறைவை அடுத்து, திட்டமிட்டபடி ஏப்ரல் 25 ஆம் திகதி, பொதுத் தேர்தலை நாடத்துவதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment