ஜெர்மன் அமைச்சர் தற்கொலை!



ஜெர்மனியின் ஹெஸ்ஸி மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஷேஃபர் (54) சனிக்கிழமை ரயில் பாதையின் அருகே இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக அரசு தரப்பில் கூறுகின்றனர்.

கொரோனா வைரஸால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை, எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து ஆழ்ந்த கவலையில் ஷேஃபர் இருந்ததாகவும், அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் ஹெஸ்ஸி மாநில பிரதமர் வோல்கர் போபியர் தெரிவித்துள்ளார். மேலும் இச்சம்பவம் அதிர்ச்சியையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
ஜெர்மனியின் பொருளாதார தலைநகரான பிராங்க்பர்ட் ஹெஸ்ஸி மாநிலத்தில் தான் அமைந்துள்ளது. மிகப்பெரிய வங்கிகளான ஐரோப்பிய மத்திய வங்கி, டாய்ச் வங்கி உள்ளிட்டவை இங்கு உள்ளது. 10 ஆண்டுகளாக ஹெஸ்ஸி மாநிலத்தின், நிதித் தலைவராக இருந்த ஷேஃபர், கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள பொருளாதார தாக்கத்தை, நிறுவனங்களும், தொழிலாளர்களும் சமாளிக்க, இரவும் பகலும் பணியாற்றி வந்துள்ளார். இது அவருக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top