வடக்கு , கிழக்கு மாகாணங்களில் 100 விகாரைகளை
அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்



குறைந்த வசதிகளுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படும் விகாரைகளை புனரமைப்பு செய்வதன் அவசியம் உணரப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் சீனாவின் குவாந்தூன் (Gwandoon) பிரதேச பௌத்த சங்கத்தின் தலைவர் வண. மிங்க் செங் (Rev.Ming Sheng) மத குருவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 20.24 மில்லியன் ரூபாய்களை உபயோகித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 விகாரைகளில் காணப்படும் ஆரோக்கிய வசதிகளை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை செயற்படுத்த புத்தசாசன அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு 2016.11.08 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது அங்கீகாரம் வழங்கியுள்ளது

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top